மிளகாய் மசியல்

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 கப்
பொடியாக நறுக்கிய குடமிளகாய் - 1 கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி - கால் கப்
புளி - பெரிய எலுமிச்சை அளவு
வெல்லம் - பெரிய எலுமிச்சை அளவு
மஞ்சள் பொடி - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
பெருங்காயப் பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - கால் கப்


 

ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி புளியை நன்றாக கரைத்து வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து அதனுடன் வெந்தயம், பெருங்காயப் பொடி, போட்டு கிளறிக் கொள்ளவும்.
அதனுடன் ஊற வைத்த மிளகாய்களையும், இஞ்சியையும் சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
பிறகு கரைத்து வைத்த புளியை விட்டு, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து மூடி விட்டு நன்றாக கொதிக்க விடவும்.
சிறிது நேரம் கழித்து பார்த்து, வெந்தவுடன் கீழே இறக்கி வைத்து மசித்து எல்லாம் ஒன்றாக சேரும் வரை கிளறவும்.
இப்பொழுது, வெல்லத்தை எளிதாக கரையும்படி சிறிதாக சீவி இதனுடன் சேர்த்து வெல்லம் கரையும் வரை கிளறி, இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்