தேங்காய்ப்பூச் சம்பல் II

தேதி: October 30, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தேங்காய்ப்பூ - 1 கப்
செத்தல் மிளகாய் - 5/6 (or தேவையான காரத்திற்கேற்ப)
வெங்காயம் - 4 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 1 நெட்டு
எலுமிச்சை சாறு - 1 1/2 மேசைக்கரண்டி
பொடியாக வெட்டிய இஞ்சி - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

அனைத்து பொருட்களையும் Food processor/அம்மி/கிரைண்டர்/மிக்ஸி இல் போட்டு சிறிது தண்ணீர் விட்டு (2 /3 மேசைக்கரண்டி)நன்கு அரைக்கவும்.
சுவையான சம்பல் தயார். இதனை இடியப்பம், புட்டு, ரொட்டி, தோசை எல்லாவற்றுடனும் சாப்பிடலாம்.


காய்ச்சல் (ஜுரம்) வந்தவர்களிற்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்:) அவர்களின் வாய்க்கு இதமான சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்