அக்கல

தேதி: October 31, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

சிவப்பு அரிசிமா - 1 கப்
கித்துள் பனங்கட்டி - 1/2 கப்
மிளகுதூள் - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை


 

அரிசிமாவை வெறும் சட்டியில்(வாணலியில்) போட்டு வறுத்து வைக்கவும்.
கித்துள் பனங்கட்டியை துண்டுகளாக்கி 1 - 2 மேசைக்கரண்டி தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும்.
பாகு நன்கு தடித்ததும் அதனுள் உப்பு, மிளகுதூள் போட்டு கந்துவிட்டு இரக்கவும்.
பின்னர் அதனுள் அரிசிமாவை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.
பாகுடன் மா நன்கு சேர்ந்ததும் அதனை உருண்டைகளாக பிடித்து தனியாக எடுத்துவைத்த மாவினுள் போட்டு பிரட்டவும். (ஒட்டாமல் இருப்பதற்கு)
சுவையான அக்கல தயார். மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நர்மதா நீங்கள் சொல்வது கருப்பட்டி என்று எங்கள் ஊரில் சொல்லப்படுவது தான் என்று நினைக்கிறேன். தேங்காய் ஓட்டில் பதநீரைக் காய்ச்சி ஊற்றிச் செய்யப்படுவது தானே?

ஹலோ விதுபா, தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். கித்துள் என்றால் பனைமரம் அல்ல. பனை வகையில் ஒன்று. கருப்பட்டி என்றும் சொல்வார்களோ தெரியவில்லை. பனைமரத்திலிருந்து எடுக்கும் பதநீரில் பனங்கட்டி செய்வது போல கித்துள் மரத்தில் இருந்து எடுக்கும் பதநீரில் கித்துள் பனங்கட்டி செய்வார்கள்.
-நர்மதா :)

நாம் சாதாரணமாக இலங்கை, இந்தியாவில் காணும் பனை வகையின் தாவரவியற் பெயர் 'பொராசஸ் ஃப்லாபெலிஃபர்' (Borassus flabellifer) என்பதாகும்.
கித்துள் பனையின் தாவரவியற் பெயர் 'கரியோடா உறென்ஸ்' (Caryota urens). ஓலைகள் சிறிது கமுகு ஓலைகளைப் போன்ற தோற்றமுடையவை. கித்துள் பனையின் பாளையை வெட்டிப் பெறும் பதநீரிலிருந்து கித்துள் பாணி, கித்துள் பனங்கட்டி செய்வார்கள்.
பனம் பொருட்களுக்கும் இவற்றுக்கும் சுவையில் நிறைய வேறுபாடு உண்டு. (இந்தத் தாவரத்திலிருந்து நுங்கு, பழங்கள், கிழங்குகள் கிடைப்பதில்லை.)
இந்தத் தகவல் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இமா

‍- இமா க்றிஸ்