வெந்தய மாங்காய்

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மாங்காய் - 10
வெந்தயம் - 2 தேக்கரண்டி
மஞ்சள் கொம்பு - ஒன்று
பெருங்காயம் - ஒரு துண்டு
மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

புளிப்புள்ள மாங்காயாக வாங்கிப் சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெந்தயம், மஞ்சள் கொம்பு, பெருங்காயம், சேர்த்து வறுத்து பொடிக்கவும்.
உப்பையும் பொடி செய்துக் கொள்ளவும்.
வேறொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகை வறுத்து அதனுடன் மிளகாய்ப் பொடி, பொடி செய்த பொடியையும் போட்டு வறுத்துக் கொள்ளவும்.
வாணலியை இறக்கி அதில் மாங்காய் துண்டுகள், பொடித்த உப்பு சேர்த்து கிளறவும்.
சூடு ஆறியவுடன் ஒரு பாட்டிலில் போட்டு குலுக்கி வைக்கவும். தினமும் வெயிலில் வைத்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்