வெல்ல எலுமிச்சை ஊறுகாய்

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

எலுமிச்சம் பழம் - 12
பிஞ்சு பச்சை மிளகாய் - 50 கிராம்
பொடியாக நறுக்கி இஞ்சி - 100 கிராம்
தூளாக்கிய அச்சு வெல்லம் - 200 கிராம்
ஊறுகாய் மசாலா - அரை கப்
பொடித்த உப்பு - அரை கப்


 

எலுமிச்சை பழத்தை கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்து அதனுடன் உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
அடுத்த நாள் எடுத்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, மற்றும் தூளாக நறுக்கிய வெல்லம் போட்டு வெல்லம் கரையும் வரை கிளறிக் கொள்ளவும்.
இதனுடன் ஊறுகாய் மசாலாவை சேர்த்து நன்றாக கிளறி ஒரு பாட்டிலில் போட்டு வைத்து விடவும்.
இந்த ஊறுகாயை தினமும் வெய்யிலில் வைத்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்