தூத் பேடா

தேதி: November 5, 2007

பரிமாறும் அளவு: 40 பேடா கிடைக்கும்.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பால் - 1 லிட்டர்,
சர்க்கரை - 150 கிராம்.
கார்ன் பிளார் மாவு - 2 மேசைக்கரண்டி,
தயிர் - 1 தேக்கரண்டி,
எசன்ஸ் - சில துளிகள்.


 

பாலை பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும்.சர்க்கரை, தயிர் சேர்த்து கிளறவும்.
கார்ன் பிளார் மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றி கெட்டியாக வரும்வரை கிளறவும்.
கெட்டியானதும் எசன்ஸ் சேர்த்து கிளறி இறக்கி ஆற விட்டு, நெல்லிக்காயளவு உருண்டைகளாக்கவும்.
உருட்டிய உருண்டைகளை உள்ளங்கையில் வைத்து அழுத்தி வைக்கவும்.
அச்சு இருந்தாலும் வைத்து அழுத்தி எடுக்கலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

செல்வியம்மா(அக்கா) அவர்களுக்கு,
தீபாவளி மற்றொரு பலகாரமாக தூத் பேடா செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.பால் வற்ற வற்ற சிறிது அடி பிடிக்க ஆரம்பித்தது.பின் பின் வேற பாத்திரத்தில் மாற்றி கெட்டியாக வரும்வரை கிளறி
கெட்டியானதும் உருண்டைகளாக்கினேன்.தூத் பேடாவும், காய்கறிகீறும்(மனோ மேடம்) அனைவரின் பாராட்டைப்பெற்றது.மிக்கநன்றி

அன்புடன்
அபிராஜன்

.

அன்பு அபி,
பால் சுண்ட, சுண்ட அடிபிடிக்கத்தான் செய்யும். ஒரு குட்டி கப்பை கவிழ்த்து போட்டால் அடி பிடிக்காது. அடிக்கடி கிளறி விடவேண்டும். வேறு கஷ்டம் எதுவுமில்லை. பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்விம்மா,
ரொம்ப நாளா இக் குறிப்பை தேடிக்கொண்டே இருந்தேன்.
கிடைத்து விட்டது. தேங்க்ஸ் டூ அபி.
அம்மா கோவிச்சிக்காதீங்க !! சின்ன கப்பை எங்கே, எப்படி கவிழ்த்துப் போடனும்னு விளக்கினீங்கன்னா சீக்கிரமா தூத் பேடா செஞ்சி அசத்திவிடுவேன்.

அன்பு சுபா,
நலமா? பாலைக் காய்ச்சும் போது பாலுக்குள் சுத்தமான குட்டி கப்பை கவிழ்த்து போட்டியானா பால் அடிபிடிக்காமல் இருக்கும். இல்லைன்னா ரொம்ப கிளறிகிட்டே இருக்கணும், ஆனாலும் அடுப்பை சிம்மில் வைத்தே செய். சூப்பரா வரும். நிறைய செய்து இங்கே கொஞ்சம் அனுப்பிடு, சரியா:-)
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

இன்னைக்கு உங்க தூத் பேடா செய்தேன்.டேஸ்ட் நல்லா இருந்தது,ஆனா கொஞ்சம் அல்வா மாதிரி இருந்தது. கொஞ்சம் முன்னாடியே எடுத்துட்டேன் போல இருக்கு. டேஸ்ட் சூப்பர்.

ஆனா செல்விமா நீங்க கெட்டியாகரவரைக்கும் கிளறனம்னு சொல்லிட்டீங்க, நான் கார்ன்ப்ளார் போட்டதனால சீக்கிரமா கெட்டியாகிடும்னு நினைச்சு, கிளறன கிளறன கிளறிக்கிட்டே இருந்தேன் போங்க.

ஸ்வீட்டுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்,தேங்க்ஸ் செல்விமா.

ஹாய் கவி,
பால் நல்லா சுண்டின பிறகு கார்ன்ஃப்ளார் மாவு சேர்த்திருக்கணும், நீ கொஞ்சம் முன்னாடியே சேர்த்திட்ட போல இருக்கு, ஸ்வீட் சாப்பிடறதுன்னா சும்மாவா? ஹல்வா மாதிரி இருந்திச்சுன்னா இன்னும் கொஞ்சம் நேரம் வெச்சிருந்திருக்கணும். எப்படியோ நல்லா இருந்திச்சில்ல, அது போதும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் செல்வி மேடம்
தூத்பேடா இன்று செய்தேன் நன்றாக வந்தது.என் மகள் விரும்பி சாப்பிட்டால்
அன்புடன்
சுதா

செல்விக்கா நான் செய்த தூத்பேடா தூதல்வா ஆயிடுச்சு..ஆனா டேஸ்ட் நல்லா இருந்தது...கார்ன்போலோர் முதல்லையே ஊத்திட்டேன் போல..என்பையன் வேற அவசர படுத்தினான்.ஸ்வீட் தா ஸ்வீட் தான்னு.ஆர்வ கோளாருல சொஞ்சம் சொதப்பிடுச்சு...டேஸ்ட் நல்லா இருந்தது..இனி அடிக்கடி செய்வேன்.

இது வரை செய்த உங்கள் குறிப்புகு அனைத்துக்கும் படம் எடுத்தேன் இந்த தூத் அல்வாவைதவிர

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அன்பு சுதா,
பாராட்டுக்கு நன்றி.

அன்பு ரேணு,
பாராட்டுக்கு நன்றி.
சர்க்கரை, தயிர் சேர்த்த பின் கொஞ்சம் தண்ணீர் பிரிந்து வரும். அதுவும் சுண்டின பின், கார்ன்ஃப்ளார் மாவை கரைத்து ஊற்றணும். கொஞ்சம் ஹல்வா போலிருந்தால், இன்னும் கூட கொஞ்சம் கார்ன்ஃப்ளார் மாவை கரைத்து ஊற்றலாம்.
முக்கியமாக, இதற்கு பால் ரொம்ப திக்காக இருக்கணும். செய்வதற்கு கொஞ்சம் பொறுமையும் வேண்டும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.