அல்வா

தேதி: November 5, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

கோதுமை - 250 கிராம்,
சர்க்கரை - 300 கிராம்,
ஜவ்வரிசி - 50 கிராம்(நைசாக பொடிக்கவும்),
பால் - ஒன்றரை கப்,
நெய் - 100கிராம்,
முந்திரி - 25 கிராம்,
ஏலக்காய் - 8,


 

கோதுமையை மூன்று நாட்களுக்கு தினமும் தண்ணீரை மாற்றி, மாற்றி ஊற வைக்கவும்.
நான்காவது நாள் கிரைண்டரில் நன்கு அரைத்து, நிறைய தண்ணீர் விட்டு,மெல்லிய துணியில் வடிகட்டி அப்படியே 3 மணி நேரம் வைக்கவும்.
மேலே தெளிந்து நிற்கும் தண்ணீரை வடித்து விட்டு, ஒருகப் பாலில் ஜவ்வரிசி மாவை கரைத்து சேர்க்கவும்.
பாதி நெய்யை அதனுடன் சேர்த்து, துடுப்பால் நன்கு கிளறி அடுப்பில் வைத்து கிளறவும்.
சுருள வரும் போது மீதியுள்ள பாலில் சர்க்கரையை கரைத்து அத்துடன் சேர்க்கவும்.
கைவிடாமல் நன்கு திரண்டு வரும் வரை கிளறவும்.
முந்திரியை ஒடித்து, மீதி நெய்யில் வறுத்து கலவையுடன் சேர்த்து கிளறவும்.
ஏலக்காயை தோல் நீக்கி, பொடியாக்கி அதனுடன் சேர்த்து கிளறி நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறிய பின் துண்டு போடவும்(நன்கு திரண்டு, நெய் கக்குவது போல் வரும்)


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்புள்ள செல்வி மேடம்,
இந்த அல்வா மிகவும் நன்றாக வந்தது. சுவையாகவும் இருந்தது. நெய்க்கு பதில் பட்டர் சேர்த்தேன். பால் சேர்க்கவில்லை ஆனாலும் நன்றாக இருந்தது. இதையே நாங்கள் இலங்கையில் மஸ்கட் என்போம். நெய்யுடன் தேங்காய் எண்ணெய் கலந்து பயன்படுத்துவோம். :) வாழ்த்துக்களும் நன்றியும்.
-நர்மதா :)

அன்பு நர்மதா,
எப்படியிருக்கீங்க? அல்வா செய்து பார்த்து, பாராட்டியதற்கு நன்றி.
பால் ஒரு சின்ன சேர்ப்பு, அவ்வளவுதான். சேர்க்காவிட்டாலும் நன்றாகவே இருக்கும்.
உங்களுக்கு எனது தீபாவளி வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.