மீன் ஃப்ரை

தேதி: November 7, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சீலா மீன் - அரை கிலோ
தனியாக கலக்கிக்கொள்ள:
காஷ்மீர் மிளகாய் தூள் - மூன்று தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி
பழுத்த தக்காளி - ஒன்று


 

தக்காளியை கையால் பிழுந்து சாறு மட்டும் எடுத்துக் கொள்ளவும். அதில் மேலே குறிப்பிட்ட அனைத்து மசாலா வகைகளையும் கலக்கி சுத்தமாக கழுவி வைத்துள்ள மீனில் தடவி ஒரு தட்டில் அடுக்கி ஃப்ரிட்ஜில் வைத்து ஊறியதும் இரும்பு தவ்வா (அ) நாண் ஸ்டிக்கில் எண்ணெய் மூன்று நான்கு கரண்டி ஊற்றி தீயை மிதமாக வைத்து பொரிக்கவும். எண்ணெய் முங்க எல்லாம் ஊற்ற வேண்டாம், அதிகமாக தீயை வைத்து பொரித்தால் எல்லோருடைய தொண்டைக்கும் இருமல் மருந்து கொடுத்து விட்டு தான் மீனை சாப்பிட கொடுக்கனும்.
மீனில் மாசாலாவை இரண்டு பக்கமும் தடவவும். மசாலாவை போட்டு கறிக்கு பிசைவது போல் பிசைந்தால் மீன் உடைந்து விடும்.


மேலும் சில குறிப்புகள்