உள்ளிச்சம்மந்தி

தேதி: November 8, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்க

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

தோலுரித்த சின்ன வெங்காயம் - 15
வரமிளகாய் - 4
தக்காளி - 2
பூண்டு - ஒரு பல்
தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டையும், வெங்காயத்தையும் முழுவதுமாக (நறுக்காமல்) போட்டு சிவக்க வறுத்து எண்ணெய் வடித்து வைக்கவும்.
சிவக்க என்றால் லேசான பொன்னிறமல்லாமல் நல்ல ப்ரவுன் நிறத்துக்கு வரும் அளவுக்கு வறுக்கவும்.
பிறகு அதே எண்ணெயில் வரமிளகாயை லேசாக வறுத்து வெங்காயத்தில் போடவும்.
தக்காளியை அடுப்பில் சுட்டு தோலுரித்து மீதமுள்ள எண்ணெயில் மசித்து நன்கு வெந்துவிடும் அளவுக்கு வதக்கி மூன்றையும் சேர்த்து உப்பு சேர்த்து அம்மியில் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்து செய்து பரிமாறலாம்.
இல்லையென்றால் தக்காளியை தோல் சீவி பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கி நன்கு மசிந்ததும் வெங்காயத்தையும் பூண்டையும், வரமிளகாயையும் அரைத்து தக்காளியுடன் சேர்த்து உப்பு சேர்த்து பரிமாறவும்.


தக்காளியை சுட்டு செய்யும் முறையில் ருசி அருமையாக இருக்கும். ஆனால் அது முடியவில்லையென்றால் மைக்ரோவேவிலோ, குக்கரிலோ வைத்து தோலுரித்தும் வதக்கலாம். இதை தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ளலாம். சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையோ சுவை. வேறெந்த குழம்பும் தேவையிருக்காது. சாதத்துடன் கலந்து பிள்ளைகளுக்கு பள்ளிக்கும் கொடுத்தனுப்பலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

தளிகா, பூண்டு ஒரு பல்லா,அல்லது ஒரு முழு பூண்டா?

1 பல் தான் மாலினி

Thanks & I like your recipes. yum yum. I want coconut chammanthi recipe. That is my favourite. Can you send the recipe.

Thanks

இதற்கு பின்னூட்டம் தந்ததில் எனக்கு மிகுந்த சந்தோஷம்.செய்வதை விட பின்னூட்டத்தை தவறாமல் தருவது ஒரு நல்ல விஷயம் தான்..விஜி திருவனந்தபுரமா?

தேங்காய் சம்மந்தி நான் செய்யும் முறை

தேங்காய் துருவல் - 1 கப்,3 வரமிளகாய், 2 சின்ன வெங்காயம்,உப்பு சேர்த்து அம்மியில்Pஓ மிக்சியிலோ வைத்து தன்னீர் விடாமல் அரைப்பது தான்...கேட்க ரொம்ம்ப சுலபமாக இருந்தாலும் சுவை அருமையாக இருக்கும்..மொருமொருப்பாக்காத சாதா சாஃப்ட் தோசையும்,மைதா தோசையும் இருந்தால் இந்த சம்மந்திக்கு சாப்பிடலாம்.

தளிக்கா வனக்கம். ஆமாம். நீங்கள் எந்த ஊர்? ரொம்ப நல்ல இருக்கும் இந்த தேங்காய் சம்மந்தி. ரொப்ம்ப தாங்ஸ்.

மகளீர் தின நல் வாழ்த்துக்கள்.

ரூபி,இன்னைக்கு உன்னுடைய உள்ளி சம்மந்தி செய்தேன்.தோசைக்கு சூப்பரோ..சூப்பர்...தேங்காய் சம்மந்தியும் செய்து பார்க்கிரேன்.

மிக்க நன்றி ஹிபா..இதனை சாதத்துக்கும் சாப்பிடலாம்..தக்காளி சாதம் மாதிரி.
இன்னொரு முறை தேங்காய் சட்னிக்கு 1 ஸ்பூன் எண்ணையில் 1 பல் பூண்டு,வரமிளகாயை சிவக்க வறுத்து தேங்காய் தக்காளியுடன் அரைத்து அதே எண்ணையில் கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கலாம் .செய்து பாருங்கள்.

எனக்கு இந்த சம்மந்தி செய்ய ரொம்ப நாளா ஆசை அப்பப்போ பார்ப்பேன் ஆனால் இந்த தக்காளிய சுடறது தான் கொஞ்சம் பயம் சின்னதா நறுக்கிட்டு வதக்கிட்டு அரைக்க கூடாதா தாளிகா அக்கா?

தாராளமா வதக்கி செய்யலாம் காயத்ரி

காயத்திரி தக்காளி சுடுவது ஈசி ஒரு போஃர்க் கில் குத்தி சுடுங்கள்.
டேஸ்ட் கிடைக்கும்.
ஜலீலா

Jaleelakamal

தாங்ஸ் அக்காஸ் நிச்சயம் ட்ரை பண்ணிட்டு சொல்றேன். செய்யனும் செய்யனும் நினைத்து இப்பதான் செய்ய போறேன். இது போல சுட்டு செய்த எங்க அந்த நெறுப்பு போல smell வருமோனு ஒரு பயம் அவ்வளவு தான். சுட்டு செய்த நல்லா இருக்கும்னு சொல்றீங்க நிச்சயம் செய்ய போறேன். இதுனால எல்லாருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் வெற்றிகரமாக காயத்ரி உள்ளி சம்மந்தி செய்ய போறாஆஆஆஆ

i have tried ur recipe it came out well......it taste like andhra's chutney.thanks

நன்றி ஷர்மி.இப்போ தான் பார்த்தேன்;-)