குடைமிளகாய் பேபிகார்ன் கறி

தேதி: November 10, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நீளமாக நறுக்கிய குடைமிளகாய் - ஒரு கப்
நீளமாக நறுக்கிய பேபிகார்ன் - ஒரு கப்
சீரகம் - சிறிதளவு
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - கால் கப்
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு
எண்ணெய் - 4 தேக்கரண்டி
அஜினோமோட்டோ - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு


 

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சிறிது சீரகம் போட்டு பொரிந்ததும் பேபிகார்னை போட்டு சிறிது வதக்கவும். பேபிகார்ன் பாதி வதங்கியதும் குடைமிளகாய், மஞ்சள்தூள் போட்டு வதக்கவும்.
குடைமிளகாய் லேசாக நிறம் மாறியதும் மிளகாய் தூள், உப்பு, அஜினோமோட்டோ போட்டு ஒரு முறை நன்றாக கிளறி கொத்தமல்லி இலை, வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்