எத்தனை தடவை உள்நுழையறது?!

பாபு மாமா, உங்க பதிவுக்கு பதில் போடலாம்னு அவசரத்துலயும் உள்நுழைஞ்சா திருப்பியும் அதே தான் காமிக்குது.. புதிய கேள்வி சேர்க்க முடியுது ஆனா ஏன் பதிவுக்கு பதிலளிக்க முடியலை?!

ஒரு தடவை பேஜ் எதுவும் ஓபன் ஆகறது இல்லை, இன்னொரு தடவை லாகின் பண்ணாலும் பதில் அளி ஆப்ஷன் வர்றது இல்லை, வேற ஒரு தடவை பாதி பதிவு தெரியறது இல்லைனு வித விதமா வம்பு பண்ணுதே.. என்ன காரணம்? இதனால தளத்துக்கு வருகையாளர்கள் குறைஞ்சுட மாட்டாங்களா? பாத்து ஏதாவது செய்யுங்க பாபு மாமா.

என்னோட அந்த பெரிய பதிவு இருந்த த்ரெட்டை நீக்கினது அட்மின்னா இல்ல வேற யாருமா?! மனம் விட்டு பேசலாம் த்ரெட்.

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

மிகுந்த மனப்போராட்டத்துக்குப்பின் அதை நீக்கியது நான்தான். ஏனெனில் அதில் இருந்த பலரின் பங்களிப்புதான் காரணம்.மனம் திறந்து வெளியிட்ட சுய விபரங்கள் பல இணையத்தில் உலவுவதில் விருப்பமில்லாததால் நான் உருவாக்கிய சில இழைகளை நானே நீக்கிவிட்டேன். மற்றபடி எந்த உள் நோக்கமுமில்லை. தவறெனில் பொறுத்துக்கொள்ளுங்கள் ஹேமா.

ஓ நீங்க தானா.. சரி விதுபா, உங்களுக்கு இஷ்டமில்லைனு நீக்கினதுல தவறு ஏதுமில்லை. நான் ஒண்ணு கேட்கட்டுமா, தப்பா எடுத்துக்காதீங்க (என்னோட அந்த பெரிய பதிவை படிச்சுட்டு தான் நீக்கினீங்கனு ந்னைச்சு கேட்கிறேன்)

உண்மையில் என்ன தான் நடந்தது? இது உங்களுக்கு தான் தெரியணும்.. உங்க கிட்ட இத்தனை நாளா பழகர காரணத்துக்காவவது எங்களுக்கு தெரிஞ்சுக்கற உரிமை இருக்குனு நினைக்கிறேன்.

நீங்க க்ரியேட் செய்யலைனா வேற யாரு உங்க ஸிஸ்டம்ல வந்து லாகின் செய்யறது? பதில் சொல்ல இஷ்டமில்லைனா வேண்ட்டம்.

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

எங்களுடையது sharing villa flat. எங்களுடன் இருப்பவர்களும் எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் தமிழ்நாட்டுக்காரர்கள் தான். ஹால் பொதுவானது. கணினியும் அங்கேதான். ஆனால் யாரை நான் குற்றம் சொல்வது?...
ஆனால் இங்கு நடப்பதையெல்லாவற்றையும் பேசிக்கொள்வதுண்டு. என்ன நடந்தது,எப்போது நடந்தது என்று எனக்கும் புரியவில்லை.நடந்தது எதையும் இனி மாற்றமுடியாது. மனதை சமாதானப்படுத்திக்கொள்ள முயற்சிப்பதுதான் ஒரேவழி.Bye Hema...

விதுக்கா...... என் பதிவை படித்தீர்களா.......... நான் உங்களை நம்புகிறேன்.....பழியுடன் நீங்கள் இங்கிருந்து செல்வது என் மனதிர்கு மிகவும் பாரமாக உள்ளது......

நர்த்தனா, என்மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி.
உங்கள் பதிவைப் பார்த்தேன். இந்த விஷயத்தில் நீங்கள் கருத்துச் சொல்லாமல் அமைதி காப்பது நலம் என்று அட்மின் அவர்கள் எழுதிய பதிலையும் பார்த்தேன்.(அதை நீங்கள் பார்த்திருக்க முடியாது). விட்டுவிடுங்கள் நர்த்தனா. இயல்பாக உங்கள் பணிகளைத் தொடர்ந்து செய்யுங்கள். இதனை இவ்வளவு பெரிதாக வளர்க்க வேண்டாம். எனக்கே இதில் விருப்பம் இல்லை. மறந்துவிடுங்கள். உங்கள் அன்புக்கு என் நன்றி. bye Narthana

(அந்த த்ரெட்டை நீக்கியது நான் தான்.உங்கள் கேள்வியை முடிந்தால் எடுத்துவிடுங்கள்)

அக்கா சரி.... இப்பொது தான் உங்கள் பதிலை பார்த்தேன் .... அட்மின் பதிலை படிக்க வில்லை... .....உங்க மனசுக்கு எது தோனுதோ அது படி செய்ங்க....

மேலும் சில பதிவுகள்