இனிப்பு கொழுக்கட்டை

தேதி: November 10, 2007

பரிமாறும் அளவு: பத்து கொழுக்கட்டை வரும்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

அரிசி மாவு - ஒரு டம்ளர்
வெல்லம் - முக்கால் டம்ளர்
உப்பு - ஒரு சிட்டிகை
தேங்காய் - நான்கு பத்தை
பச்சபருப்பு - ஒரு மேசைக்கரண்டி (ஊற வைத்தது)
ஏலக்காய் - இரண்டு (பொடி செய்யவும்)


 

வெல்லத்தை கொஞ்சம் தண்ணீர் ஊற்றி உப்பு ஒரு சிட்டிகை போட்டு கொதிக்க விட்டு வடிகட்டவும்.
இப்போது மாவில் துருவிய தேங்காய், ஊற வைத்த பச்ச பருப்பு, பொடி செய்த ஏலம், வடிகட்டிய வெல்ல தன்ணீர் போட்டு நல்ல பிசைந்து கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி சட்டியில் ஈர துணியை விரித்து பிடித்த கொழுகட்டைகளை அவிக்கவும்.


எண்ணெய் இல்லாத உணாவு காலை, மாலை நேர டிபனுக்கு ஏற்றது. முக்கியமாக குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்

மேலும் சில குறிப்புகள்