கூட்டு

தேதி: November 10, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாசிப்பருப்பு - 1 கப்,
முட்டைக்கோஸ் (பொடியாக நறுக்கியது) - 1 கப்,
பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1,
தக்காளி - 1,
பச்சை மிளகாய் - 1,
சீரகம் - 1 தேக்கரண்டி,
மிளகு - 1/2 தேக்கரண்டி,
அரிசி - 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி தழை - 1 மேஜைக்கரண்டி,
எண்ணெய் - 2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

பாசிப்பருப்பை தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும்.
பருப்பு வெந்ததும் நறுக்கிய கோஸ், வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, உப்பு சேர்த்து வேக விடவும்.
வெறும் வாணலியில் சீரகம், மிளகு, அரிசியை வறுத்து பொடிக்கவும்.
கோஸ் வெந்ததும், பொடித்த பொடியை சேர்த்து, ஒரு கொதி விடவும்.
எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

செல்விக்கா, இந்த கூட்டை செய்து பார்த்தேன். செய்வதற்கு எளிதாகவும், மிகவும் நன்றாகவும் இருந்தது. நீங்கள் கொடுத்திருந்த அளவே எண்ணெய் உபயோகித்தேன்.சத்தான சமையலை செய்த திருப்தி எனக்கு. மிக்க நன்றி.

ஹாய் வானதி,
நிச்சயமாக இந்த குறிப்பு எளிமையானது, சத்தானது. டயட் குறிப்புக்கென கொடுத்த குறிப்பு. சில தவிர்க்க இயலாத காரணங்களால் அந்த சார்ட்டை வெளியிட முடியவில்லை. விரைவில் வேறு சார்ட் வரும், டயட்டில் உள்ளவர்களூக்கு பயனளிக்கும். பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.