சிறுகீரை பொரியல்

தேதி: November 10, 2007

பரிமாறும் அளவு: 2 நபருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிறுகீரை - 1 கட்டு,
சின்ன வெங்காயம் - 10,
காய்ந்த மிளகாய் - 2,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
எண்ணெய் - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

கீரையை கழுவி, பொடியாக நறுக்கவும்.
வெங்காயத்தை நீளமாக நறுக்கி, மிளகாயை கிள்ளி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
வெங்காயம், மிளகாய் வதக்கி, கீரையையும் வதக்கி, உப்பு தூவி ஒரு கை தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.
தண்ணீர் வற்றி சுண்டியபின் இறக்கவும்.


தேவைப்பட்டால் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி கிளறி இறக்கவும்.

மேலும் சில குறிப்புகள்