காஞ்சிபுரம் இட்லி 2

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - ஒரு கப்
புழுங்கல் அரிசி - ஒரு கப்
உளுத்தம் பருப்பு - ஒரு கப்
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - அரை தேக்கரண்டி
நெய் - ஒரு மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 2 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 5-8
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
சிறிய துண்டுகளாக உடைத்த முந்திரி - 2 தேக்கரண்டி
உலர் திராட்சை - 2 அல்லது 3 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப


 

உளுத்தம் பருப்பு மற்றும் பச்சரிசி, புழுங்கல் அரிசி இவற்றை ஆறுமணி நேரம் ஊற வைக்கவும்.
இதிலுள்ள தண்ணீரை வடித்து விட்டு சிறிதளவு மட்டும் தண்ணீர் சேர்த்து மென்மையான பதத்தில் மாவாக வரும்வரை அரைக்கவும்.
அந்த மாவை திரண்டு வரும் வரை கரண்டி கொண்டு நன்கு கலக்கவும்.
தேவைகேற்ப உப்பு சேர்த்து அந்த மாவை மேலும் 6-8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சை சீவிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய்யைக் காயவைத்து, முதலில் மிளகை வறுத்து பின் சீரகத்தைச் சேர்த்து வறுக்கவும்.
அதை வாணலியிலிருந்து எடுத்து கரகரவென அரைத்து அரைத்தமாவில் சேர்க்கவும்.
அத்துடன் முந்திரித் துண்டு, மஞ்சள் தூள், பெருங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து லேசாக வறுத்து மாவுடன் கலக்கவும்.
நறுக்கின கொத்தமல்லி இலையை இட்லியை வேக வைக்குமுன் சேர்க்கவும்.
நெய் அல்லது எண்ணெய் தடவிய இட்லி தட்டில் உலர் திராட்சை தூவி, மாவை ஊற்றி 10-15 நிமிடம் சாதாரணமாக இட்லி தயார் செய்வது போல் வேக விடவும்.


மேலும் சில குறிப்புகள்