பீர்க்கங்காய் கூட்டு

தேதி: November 10, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாசிப்பருப்பு - 1 கப்,
பீர்க்கங்காய் - 1,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி,
சின்ன வெங்காயம் - 5,
தக்காளி - 1,
அரிசி - 2 தேக்கரண்டி,
சீரகம் - 1 தேக்கரண்டி,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய் - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

பாசிப்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
பீர்க்கங்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும்
வெங்காயம், தக்காளியையும் பொடியாக நறுக்கவும்
வெந்த பருப்புடன் காய், வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வேகவிடவும்.
வெறும் வாணலியில் அரிசி, சீரகத்தை வறுத்து பொடிக்கவும்.
காய் வெந்ததும் பொடித்த பொடியை சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து கூட்டில் கொட்டி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்