உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

முட்டைக்கோஸ், முட்டை பொடிமாஸ்

 

இந்த பொடிமாஸ் சுறாமீன்புட்டு போல நல்ல ருசியாக இருக்கும்

தேவையான பொருட்கள்

  • முட்டைக்கோஸ் - 1/4 கி,
  • முட்டை - 2 ,
  • தேங்காய்துருவல் - 1/2 கப்,
  • பச்சைமிளகாய் - 2 ,
  • சோம்பு - 1 டீஸ்பூன் ,
  • கசகசா - 1 டீஸ்பூன் ,
  • பூண்டு - 4 பல் ,
  • இஞ்சி - ஒரு சிறு துண்டு ,
  • பெ. வெங்காயம் - 1,
  • கடுகு - 1 டீஸ்பூன் ,
  • உ. பருப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை

  • இஞ்சி, பூண்டு, சோம்பு, கசகசா, பச்சைமிளகாய் இவை ஐந்தையும் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உ.பருப்பு தாளித்து நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய முட்டைக்கோஸை போடவும்.
  • அரைத்து வைத்திருக்கும் மசாலாவை முட்டைகோஸில் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
  • உப்பு சேர்க்கவும்.
  • முட்டையில் மஞ்சள்தூள் சேர்த்து கலக்கி வைக்கவும்.
  • கோஸ் வெந்ததும் கலக்கி வைத்திருக்கும் முட்டையை ஊற்றி வதக்கவும்.
  • முட்டை நன்றாக வெந்ததும் தேங்காய்துருவலை போட்டு இறக்கவும்.

வழங்கியவர்

மாலதி மோகன்


comments