வெந்தயக்கீரை கூட்டு

தேதி: November 11, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

(வெந்த) துவரம் பருப்பு - 1/2 கப்,
வெந்தயக்கீரை(பொடியாக நறுக்கியது) - 1/2 கட்டு,
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1,
தக்காளி - 1,
காய்ந்த மிளகாய் - 3,
சீரகம் - 1 தேக்கரண்டி,
அரிசி - 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
எண்ணெய் - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

வெந்த பருப்புடன் நறுக்கிய கீரை, வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து வேக விடவும்.
வெறும் வாணலியில் சீரகம், மிளகாய், அரிசியை வறுத்து பொடிக்கவும்.
கீரை வெந்ததும், பொடித்த பொடியை சேர்த்து, ஒரு கொதி விடவும்.
எண்ணெயில் கடுகு தாளித்து கொட்டி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்