தேதி: November 11, 2007
பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
அரைக்கீரை - 1/2 கட்டு,
சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 5,
தக்காளி - 1,
பச்சை மிளகாய் - 1,
பூண்டு - 2 பல்,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
எண்ணெய் - 2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.
கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். நறுக்கிய கீரை, பச்சை மிளகாய், தக்காளி, பூண்டு, உப்பு சேர்த்து வேக விடவும். கீரை வெந்தவுடன் மத்தால் மசிக்கவும்.
எண்ணெயில் கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி மசியலில் கொட்டவும்.