மீன் மசாலா

தேதி: November 11, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

மீன் - 1/4 கிலோ,
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1,
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி,
சீரகம் - 1/2 தேக்கரண்டி,
மிளகு - 1/2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
கொழுப்பு நீக்கப்பட்ட தயிர் - 1/4 கப்,
பூண்டு - 5 பல்,
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.


 

மீனை சுத்தம் செய்து மெல்லிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, மிளகாய் தூள், பூண்டு, மஞ்சள் தூள், சீரகம், மிளகு, சோம்பு, உப்பு சேர்த்து அரைக்கவும்.
அரைத்த விழுதை தயிரில் கலக்கவும்.
மசாலாவை மீன் துண்டுகள் மீது நன்றாக பூசி, 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
தோசைக்கல்லில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு, இருபுறமும் சிவக்க சுட்டு எடுக்கவும்.
(அவனில் வைப்பதாக இருந்தால், கிரில்லில் 5 நிமிடம் வைத்து எடுக்கவும்).


மேலும் சில குறிப்புகள்


Comments

செல்விமா
உங்க மீன் மசாலதான் எங்க வீட்ல இன்னைக்கு சைட் டிஷ் நல்லா இருந்தது.
நான் பொதுவா வெங்காயமெல்லாம் போட்டு செய்ய மாட்டேன்,இன்னைக்கு செஞ்சேன் நல்லா வந்தது நன்றி செல்விமா.

இது வெங்காயம் போட்டதால எவ்வளவு நாள் வைக்கலாம். நான் இதை 1/2கிலோவில செய்தேன்.

ஹாய் கவி,
பாராட்டுக்கு நன்றி. ஃப்ரிஜ்ஜில் 1 வாரம் கூட வைத்திருக்கலாம். ஒன்றும் ஆகாது. கைப்படாமல் ஒரு ஸ்பூனால் எடுக்கவும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

நானும் வெங்காயம்,தக்காளி சேர்க்க மாட்டேன்,இன்று உங்க குறிப்பின்படி கறிவேப்பில்லை சிறிது அரைத்து சேர்த்தேன்.நல்ல இருந்தது.உங்க சேலம் மீன் குழம்புடன்,மீன் மசாலா சூப்பர்.

அன்பு மேனு,
ஆமாம்ப்பா, வித்தியாசமா வெங்காயம், தக்காளி அரைத்து கொஞ்சம் மசாலாவோடு இருக்கும்.
பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

எனக்கு மீன் இல்லாமல் எந்த சாப்பாடும் இறங்காது.எலுமிச்சை சாதத்துடன் இந்த மீன்மசாலாவும் செய்தேன்.சூப்பர் டேஸ்ட்.எப்போது வெங்காயம் மிளகு மிளகாய்த்தூள் கறிவேப்பிலை மட்டும்தான் அரைத்து மீன் மசாலா செய்வேன்.தக்காளி,சோம்பு சீரகம் சேர்த்ததால் இன்னும் வித்த்யாசமாக சுவையாக இருந்தது.தேங்க்யூ செல்விம்மா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு கவி சிவா,
பாராட்டுக்கு நன்றி. வித்தியாசமான மசாலா தானிது. நான் சாப்பிடா விட்டாலும், சும்மா ஒரு அனிமல் டெஸ்ட் வீட்டில செக் பண்ணிடுவேன். சரியா வந்தா நீங்களும் மாட்டி :-)
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

hello your fish masala comes out very nice. thakyou.