கோதுமை ப்ரட் சாண்ட்விச்

தேதி: November 11, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை ப்ரட் - 6 ஸ்லைஸ்,
கொழுப்பில்லாத தயிர் - 1/2 கப்,
மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி,
தக்காளி - 2,
கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி,
பச்சை மிளகாய் - 1,
காய்ந்த மிளகாய் - 1,
உப்பு - தேவையான அளவு.


 

தயிரை சுத்தமான துணியில் கட்டி, தண்ணீரை வடித்து, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து பேஸ்ட் செய்யவும்.
தக்காளி, காய்ந்த மிளகாய், உப்பு சிறிது சேர்த்து அரைக்கவும்.
கொத்தமல்லி, உப்பு, மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
ஒரு ஸ்லைஸ் ப்ரட் மீது தயிர் பேஸ்ட் தடவி இன்னொரு ஸ்லைஸால் மூடவும்.
அதன் மீது தக்காளி பேஸ்டை தடவி இன்னொரு ஸ்லைஸால் மூடவும்.
அதன் மீது கொத்தமல்லி பேஸ்டை தடவி இன்னொரு ஸ்லைஸால் மூடி, குறுக்காக வெட்டவும்.


மேலும் சில குறிப்புகள்