சுரைக்காய் கோஃப்தா - 2

தேதி: November 11, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோஃப்தாவுக்கு:
============
துருவிய சுரைக்காய் - 1 கப்,
பொட்டுக்கடலைப்பொடி - 1/2 கப்,
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.

குழம்புக்கு:
=========
பெரிய வெங்காயம் - 2,
தக்காளி - 2,
இஞ்சி, பூண்டு விழுது - சிறிது,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:
=======
கடுகு - 1/2 தேக்கரண்டி,
சோம்பு - 1/2 தேக்கரண்டி,
எண்ணெய் - 1 தேக்கரண்டி.


 

கோஃப்தாவுக்கு தேவையான எல்லாவற்றையும் ஒன்றாக பிசைந்து சின்ன சின்ன உருண்டையாக்கி ஆவியில் வேக வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சோம்பு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வெந்து கிரேவியானதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், 1/2 தம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
குழம்பு நன்கு கொதித்து கெட்டியானதும் கோஃப்தா சேர்த்து ஒரு கொதி விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்


மேலும் சில குறிப்புகள்