தந்தூரி சிக்கன்

தேதி: November 11, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் - 200 கிராம்,
கொழுப்பு நீக்கிய தயிர் - 1 1/2 ஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி,
தந்தூரி மசாலா - 1/2 தேக்கரண்டி,
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
இஞ்சி, பூண்டு விழுது - சிறிது,
எண்ணெய் - 2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

சிக்கனை சுத்தம் செய்து, பெரிய துண்டுகளாக வெட்டி, கொழுப்பு, தோல் நீக்கி ஆவியில் 5 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
தயிருடன் எல்லா தூள்கள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலக்கவும்.
சிக்கன் மேல் முள் கரண்டியால் குத்தி மசாலாவை நன்கு தடவி, 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
நான்ஸ்டிக் வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சிக்கனை அதில் போட்டு மூடி வைத்து வேக விட்டு எடுக்கவும்.
(அவனில் சுடுவதாக இருந்தால், க்ரில் மோடில் 10 நிமிடம் வைத்திருந்து எடுத்தால் போதுமானது).


மேலும் சில குறிப்புகள்


Comments

செல்வி அக்கா நல்ல சொவ்fடா மசாலா எல்லாம் நல்லா ஊறி பிரமாதமாக இருந்தது.

சுரேஜினி

அன்பு சுரேஜினி,
செய்வதும் சுலபம். இந்த முறையில் ஆயிலும் குறைவாக பிடிக்கும். பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.