கம்பு அடை

தேதி: November 11, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

கம்பு - 1 கப்,
பச்சரிசி - 1/2 கப்,
துவரம் பருப்பு - 1/4 கப்,
கடலைப்பருப்பு - 1/4 கப்,
உளுத்தம் பருப்பு - 1/4 கப்,
காய்ந்த மிளகாய் - 8,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவையான அளவு.


 

அரிசி, கம்பை ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பருப்புகளையும் ஒன்றாக சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து, தனித்தனியாக கரகரப்பாக, கெட்டியாக அரைக்கவும்.
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து கலந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, கனமான அடைகளாக தட்டி, நடுவில் ஓட்டை போடவும்.
நடுவிலும் சுற்றிலும் லேசாக எண்ணெய் விட்டு, திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும் (அடுப்பை சிறு தீயில் [சிம்மில்] வைக்க வேண்டும்).


மேலும் சில குறிப்புகள்


Comments

வணக்கம்,இங்கு (U.S.)கம்பு மாவுதான் கிடைத்தது,முழு தானியத்திற்கு பதிலாக மாவை பயன்படுத்தலாமா?நல்லா வருமா?
இந்த பாக்கெட் வாங்கி 3 வாரமாகிறது,இன்னும் ஒரு ரெசிபியும் சிக்க மாட்டேன்றது!!!

அன்பு அமிழ்தினி,
நலமா? தாமதத்திற்கு மன்னிக்கவும்.
மாவை பயன்படுத்தலாம், முழு தானியமாக இருந்தால் கொஞ்சம் கரகரப்பாக அரைக்கலாம், மாவாக இருப்பதால் கொஞ்சம் நைசாக இருக்கும்.

மாவை வறுத்து கொழுக்கட்டையும் செய்யலாம்.
நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.