காளான் சூப்

தேதி: November 11, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பட்டன் காளான் - 5,
வெங்காயம் - 1,
குடமிளகாய் - 1/2,
சீரக பொடி - 1/2 தேக்கரண்டி,
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி,
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

காளான், வெங்காயம், குடமிளகாய் எல்லாவற்றையும் சுமாரான துண்டுகளாக நறுக்கி, ஒரு தம்ளர் தண்ணீரில் வேக வைக்கவும்.
வெந்ததும் மிக்ஸியில் இட்டு அரைத்து, பெரும் துளையுள்ள வடிகட்டியில் வடிகட்டவும்.
1 1/2 கப் தண்ணீர், சீரக பொடி, மிளகு தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

madam,
idhai appadiya vadhaki arraikamal kudikakutdatha

madam,
idhai appadiya vadhaki arraikamal kudikakutdatha

செல்வி அக்கா
காளான்சூப் செம டேஸ்ட் 2 வது தடவையும் செய்துவிட்டேன் சைனீஷ் சூப் மாதிரி நல்ல சுவை.

சுரேஜினி

அன்பு சுரேஜினி,
இரண்டாம் முறை செய்யும் அளவு பிடித்து விட்டதா? ரொம்ப சந்தோஷம். பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.