வெஜிடபிள் சீராளங்கறி

தேதி: November 11, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலைப்பருப்பு - 1 கப்,
பொடியாக நறுக்கிய காய்கறிகள் - 1 கப் (கேரட், கோஸ், பீன்ஸ்),
சோம்பு - 1/2 தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் - 4,
உப்பு - தேவையான அளவு,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய் - 1 தேக்கரண்டி.


 

கடலைப்பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்து, சோம்பு, மிளகாய், சோம்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
அரைத்த விழுதுடன், காய்கறிகளை கலந்து, பிசைந்து சின்ன சின்ன உருண்டையாக்கி ஆவியில் வேக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வேக வைத்த உருண்டைகளை உதிர்த்து வதக்கி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்