கடலைமாவு தோசை

தேதி: November 11, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

கடலை மாவு - 1 கப் (200 கிராம்),
சீரகம் - 1/2 தேக்கரண்டி,
பச்சை மிளகாய் - 2,
சின்ன வெங்காயம் - 6,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி தழை - 1 மேசைக்கரண்டி,
எண்ணெய் - 1 கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

கடலை மாவை உப்பு சேர்த்து தோசை மாவு பதமாக கரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி வதக்கி, மாவில் கலக்கவும்.
மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

செல்வி,
கடலைமாவு தோசை மிக நன்றாக வந்தது. இரண்டுபேருக்கான அளவு என்பதால் பயமில்லாமல் இதைச் செய்ய ஆரம்பித்தேன். செய்வதற்குச் சுலபமாக இருந்தது. அதிக நேரம் எடுக்கவில்லை. வடையின் சுவையுடன் மிக நன்றாக இருந்தது.எதுவும் மிஞ்சவில்லை. குறிப்புக்கு நன்றி. :-) படம் அனுப்புகிறேன்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

அன்பு இமா,
காலை டிபனுக்கு சிம்பிளா செய்யலாம். விஜிடபிள் சட்னி, கொத்தமல்லி சட்னியுடன் சுவையாக இருக்கும். டயட்டில் இருக்கும் போதும் சாப்பிடலாம். படம் அனுப்புங்கள். பார்க்க ஆவலாக உள்ளேன். நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

திருமதி. இமா அவர்கள் இந்த குறிப்பினை பார்த்து தயாரித்த கடலைமாவு தோசையின் படம்

<img src="files/pictures/kadalai_dosai.jpg" alt="picture" />

செல்வி,
கடலை மாவு தோசை மிகவும் சுவையாக இருந்தது.உருளைக்கிழங்கு கடலைக்குருமாவும் சாப்பிட்டேன். சுவையோ சுவை.

செபா.

அன்பு இமா,
வாவ்! பார்க்கவே கலர்ஃபுல்லா அழகா இருக்கு. நன்றி இமா & அட்மின்.

அன்பு செபா,
காம்பினேஷன் நீங்கல்லாம் சொல்லும் போது தான் எனக்கும் புதிது புதிதாக தெரிகிறது. பாராட்டுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

கடலை மாவு தோசை செய்தேன்..தக்காளி தொக்குடன் ரொம்ப நல்லா இருந்தது... அடை டேஸ்ட் கொஞ்சம்... செய்யறதுக்கும் ரொம்ப ஈஸி..

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

அன்பு சங்கீதா,
நலமா? சாரிப்பா, உடம்பு இன்னும் சரியாகததால், பதில் போடவே முடியலை. உடம்பு எப்படி இருக்கு? லீவு போடப் போகிறாயா?
உடமபை பார்த்துக்கோ. பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.