க்ரில்டு மீன்

தேதி: November 11, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

(அதிகம் முள்ளில்லாத) மீன் - 1/4 கிலோ,
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி,
மாங்காய் தூள் - 1/2 தேக்கரண்டி,
சீரகம் - 1/2 தேக்கரண்டி,
மிளகு - 1/2 தேக்கரண்டி,
இஞ்சி - சிறிது,
ஓமம் - 1/4 தேக்கரண்டி,
கொழுப்பு நீக்கப்பட்ட தயிர் - 2 தேக்கரண்டி,
பூண்டு - 4 பல்,
எழுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி,
எண்ணெய் - 2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

மீனை சுத்தம் செய்து, தோல் உரித்து, ஆங்காங்கே கீறி வைக்கவும்.
சீரகம், இஞ்சி, பூண்டு, மிளகாய் தூள், மிளகு, ஓமம், மாங்காய் தூள், உப்பு சேர்த்து அரைக்கவும்.
அரைத்த விழுதுடன் தயிர், எழுமிச்சை சாறு, எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
கலக்கிய மசாலாவை மீனின் மீது நன்றாக பூசி, 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
அவனில் க்ரிலில் 10 நிமிடம் திருப்பி, திருப்பி வைத்து சுட்டு எடுக்கவும்.
(தோசைக்கல்லில் போடுவதாக இருந்தால், கொஞ்சமாக எண்ணெய் விட்டு, இருபுறமும் சிவக்க சுட்டு எடுக்கவும்).


மேலும் சில குறிப்புகள்


Comments

மசாலா டேஸ்ட் சூப்பர்.தோல் உறிக்காமத்தான் கிரில் ஃபிஷ் செய்தேன்,இங்கு sheri fish என்று கிடைக்கும்,அதில் செய்து பார்த்தேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு ஆசியா,
நலமா? முதன்முறை பேசறொம்னு நினைக்கிறேன். தனீஷாகிட்ட சொல்றேன்.
பாராட்டுக்கு நன்றி. தோல் உரிக்கணும்னு அவசியம் இல்லை. இது டயட்டுக்குன்னு நான் கொடுத்ததால் தோல் உரிக்க சொல்லி இருந்தேன். இந்த முறையில் செய்தால் டயட்டில் இருப்பவர்களம் பயமின்றி சாப்பிடலாம். சுலபமும் கூட. நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

நான் முன்பே உங்களிடம் இரு முறை(சேலம் மீன் குழம்பில்) பேசி இருக்கிறேன்.கொஞ்ச நாளா நீங்க அருசுவையில் வரலை.இப்ப பார்க்கிறேன்.எனக்கு மீன் ரொம்ப பிடிக்கும்,வாரத்தில் 4 நாள் மீன் தான் எங்க வீட்டில்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

உங்கள் கிரில் மீன் பேக் பண்ணியவுடன் போட்டொ எடுத்தேன்,அட்மின் ஃபைல் அட்டாச்சு பண்ணி அனுப்புவதற்குள் சிஸ்டம் ஆப் ஆகி விடுகிறது.இந்திராவுக்கு அனுப்பினேன்,பார்த்துவிட்டு சாப்பிடனும் போல் உள்ளது என்று சொன்னாங்க.விரைவில் அட்மினுக்கு அனுப்புகிரேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு ஆஸியா,
சீக்கிரம் அனுப்புங்க, அந்த அழகான படத்தை பார்க்க ஆவலா இருக்கோம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அட்மின் விரைவில் இணைத்து விடுவார்.ஓமம்,மாங்காய்த்தூள் இல்லாததால் சேர்க்கவில்லை.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இன்று கிரில்டு மீனும் செய்தேன்.நன்றாக இருந்தது.அவனில் வைத்தேன் .கலர் வரவில்லை...தோசைகல்லில் வைத்து கலர் வந்ததும் எடுத்தேன்.சுவையாக இருந்தது...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அன்பு ரேணுகா,
நலமா? ரொம்ப நன்றிப்பா பாராட்டுக்கு. ஓவனில் செய்யும் போது கலர் வர கொஞ்சம் நேரம் எடுக்கும். தோசக்கல்லில் சீக்கிரம் வந்துடும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

திருமதி. ஆசியா ஒமர் அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த க்ரில்டு பிஷ்ஷின் படம்

<img src="files/pictures/grilled_fish.jpg" alt="picture" />

போட்டோ இணைத்தமை குறித்து மிக்க மகிழ்ச்சி.தாங்கள் பிஸியாக இருந்தாலும் உடனுக்குடன் பதில் தருவது ஆச்சரியத்தையே தருகிறது.நன்றி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு ஆசியா,
போட்டோ ரொம்ப அழ்கா இருக்கு. நல்லா அழகு படுத்தியிருக்கீங்க.
நிறைய வேலைக்கிடையிலும் உடனே போட்டோ போட்ட அட்மினுக்கு நன்றி.
அன்பபடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.