வாழைப்பழம் கேக்

தேதி: November 12, 2007

பரிமாறும் அளவு: 10 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பெரிய வாழைப்பழம் - 5
ஸ்வீட் ப்ரெட் பாக்கெட் - ஒன்று
தேங்காய்பால் டின் - ஒன்று (400 மி.லி)
கன்ஸ்டர்ட் மில்க் டின் - ஒன்று (400 மி.லி)
வெனிலா பவுடர் - ஒரு தேக்கரண்டி
பட்டர் - 100 கிராம்
முட்டை - 4
சர்க்கரை - அவரவர் சுவைக்கேற்ப


 

முதலில் முட்டையை கலக்கவும். பின்பு அதில் பால் சேர்க்கவும்.
பின்பு அதில் ப்ரெட் மற்றும் வாழைப்பழம் வெனிலா பவுடர், சர்க்கரை, உருக்கிய பட்டர் எல்லா பொருட்களையும் போட்டு கைகளால் நன்கு பிசையவும்.
பிறகு கேக் தட்டில் ஊற்றி அவனில் 200 டிகிரியில் 30 நிமிடம் பேக் செய்யவும்.
செய்வது எளிது. வெந்ததும் சரி பார்த்து வெளியே எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ரஸியா அக்கா உங்களுடைய குறிப்பில் இருந்த வாழைப்பழகேக்மிகமிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன்.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

அன்பு துஷ்யந்தி,இந்த கேக் வியட்நாமியன் செய்முறை.என் கணவருக்கு ரொம்ப பிடிக்கும்!செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததர்க்கு ரொம்ப நன்றி!