தர்த் போம்(ஆப்பிள்)

தேதி: November 12, 2007

பரிமாறும் அளவு: 8 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஆப்பிள் - 3
பப்ஸ் சீட் - ஒன்று
ஆப்பிள் ப்யூரி(கொம்போட்) - 200 கிராம்
லேசான பட்டர் - ஒரு மேசைக்கரண்டி


 

முதலில் ஆப்பிளை தோல் சீவி மெல்லிய ஸ்லைஸாக வெட்டி அதில் உள்ள விதைகளை நீக்கவும்.
பப்ஸ் சீட்டை அவன் ட்ரேயில் பட்டர் பேப்பரை விரித்து அதில் ரவுண்டாக விரித்து வைக்கவும் அதன் மேல் பட்டரை பரவலாக தடவவும்.
அதன் மேல் ஆப்பிள் ப்யூரியை பரவலாக தடவவும். பின்பு அதன் மேல் நறுக்கிய ஆப்பிளை வரிசையாக பரப்பவும் இரண்டு வரிசை வரும், பின்பு 180 டிகிரியில் 20 நிமிடம் பேக் செய்யவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ரஸியா, வீட்டில் பேஸ்ட்ரி ஷேட்டும், ஆப்பிள் சாஸும் இருந்ததால் இக் குறிப்பை எளிதாக செய்து விட்டேன். விபாவிற்கு செய்து குடுத்தேன். ஆப்பிள் பை போல இருக்காம். அடிக்கடி செய்யனுமாம். நானும் ஸைடில் அப்படியே டேஸ்ட் செய்தாச்சு. ரொம்ப நல்லா இருந்தது. நன்றி.

எங்கள் வீட்டிலும் இது ரொம்ப இஷ்ட்டம்!இது கடைய்யில் கிடைக்கும்,ஆனால் நாம் வீட்டிலேயே சுலபமா செய்யலாம்,விபாவிர்க்கு ரொம்ப பிடித்ததில் எனக்கு தான் சந்தோஷம்!நன்றியை சொல்லிடுங்க!

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. வானதி அவர்கள் தயாரித்த தர்த் போமின் படம்

<img src="files/pictures/aa268.jpg" alt="picture" />

அக்கா படத்தை பார்க்கும் போதே ஆசையா இருக்கு!!சுவைய்யும் சூப்பரர இருக்கும் என நினைக்கிறேன்! இங்கு பப்ஸ் சீட் ரவுண்டாக கிடைக்கும்.படத்தை வெளியிட்ட அட்மின் அண்ணனுக்கும் எனது நன்றிகள்