பன் டீவ்

தேதி: November 12, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா - அரை கிலோ
சீனி - 80 கிராம்
அல்சா பாக்கெட் - 3/4 பாக்கெட்(அ)பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
வெள்ளை எள் - 100 கிராம்
சன் ஃப்ளவர் ஆயில் - 3/4 லிட்டர்


 

மைதாவையும் பேக்கிங் பவுடரையும் இரண்டு முறை நன்றாக சலிக்கவும். பின்பு சர்க்கரையை மிக்ஸியில் அரைத்து ஒன்றாக கலந்து சலிக்கவும்.
பின்பு பூரி மாவு பதத்திற்க்கு பிசைந்து ஒரு மணி நேரம் புளிக்க வைக்கவும்,
பிறகு பூரி அளவு உருண்டைகளாக செய்யவும்.
பின்பு அவற்றை பூரிக்கட்டையால் அதிரச அளவு கனத்திற்கு தேய்க்கவும். (ஒட்டினால் மாவு போட்டுக் கொள்ளலாம்) பிறகு தேய்த்த அப்பளங்களை எள் மேல் போட்டு ஒட்டுவது போல் (இரண்டு பக்கம்)பிரட்டவும்.
இதற்கிடையில் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் இந்த அப்பளங்களை போடவும்.
இது பூரியைப்போல் நன்றாக உப்பி வரும் இரண்டு புறமும் திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும். அனைத்து உருண்டைகளையும் இது போல் செய்யவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

எள் சேர்த்து செய்ததில் ரொம்ப நல்லாயிருந்தது.ரொம்ப ஈஸி குறிப்பு.நன்றி ரசியாக்கா!!

இது எனது மாமியாரிடம் கற்றுக்கொண்டது,இதுவும் வியட்நாம் செய் முறை தான் ஆனால் இது நம் ஊர் அதிரசம் போல் எள் வாசனைய்யுடன் நன்றாக இருக்கும்!ரொம்ப நன்றிமா!