உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

இஞ்சி லேகியம்

 

வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கு நல்ல மருந்து பித்தத்திற்கும் நல்ல மருந்து

தேவையானப் பொருட்கள்

  • துளிர் இஞ்சி - 1 கப்
  • உலர்ந்த திராட்சை - 15 கிராம்
  • பாதாம் பருப்பு - 20
  • ஏலக்காய் - 5
  • நெய் - 1/4 கப்
  • சீனா கல்கண்டு - 50 கிராம்
  • வெல்லம் - 1/2 கப்

செய்முறை

  • இஞ்சியை தோல் சீவி வெட்டி 1/2 கப் தண்ணீர் சேர்த்து வடிகட்டி சிறிது நேரம் வைக்கவும்.
  • தெளிந்ததும் மேலாக எடுத்து அதில் திராட்சை, பாதாம் பருப்பு, ஏலக்காய் சேர்த்து அரைக்கவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு அரைத்த விழுது, நெய், வெல்லம் சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்கி காற்று புகாத ஜாடியில் போட்டு மூடி வைக்கவும்.

வழங்கியவர்

T S JAYANTHI, CHENNAI - 600 048

பரிமாறும் அளவு

சமைக்கும் நேரம்

6 நபர்கள் 30 நிமிடங்கள்
random food image


comments
டியர் ஜெயந்திமா,
டிசம்பர் 9, 2007 - 7:37pm - வழங்கியவர் Muthulakshmi

வணக்கம். நலமா. உங்களிடம் இப்போதுதான் முதல் முறையாக பேசுகிறேன்.இந்த லேகியம் செய்து பார்த்தேன் மிக அருமையாக இருந்தது. உங்கள் குறிப்புக்கு மிக்க நன்றி. எப்போ அடுத்த சென்சுரி கொடுக்க போறீங்க.மீண்டும் நிறைய பேசலாம். ஒகே bye.