உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

பிஸ்கட் புட்டிங்

 


தேவையானப் பொருட்கள்

  • மேரி பிஸ்கட் - 15
  • பால் - 1/2 லி
  • சீனி - 1/4 படி
  • முட்டை - 5

செய்முறை

  • முதலில் பாலில் மேரி பிஸ்கட்டை 15 நிமிடம் ஊற வைக்கவும்.
  • முட்டையையும்,சீனியையும் கலக்கவும்.
  • ஊற வைத்த பிஸ்கட் + பாலை மிக்ஸியில் அடிக்கவும்.
  • அதை முட்டை,சீனியுடன் சேர்க்கவும்.
  • கேக் செய்ய கூடிய ஒரு வட்ட வடிவ பாத்திரத்தில் கொஞ்சம் சீனியை போட்டு அடுப்பில் குறைந்த தீயில் வைக்கவும்.சீனி உருகி brown கலர் வந்தவுடன் அடுப்பை நிறுத்தவும்.
  • இதை ஆற விடவும்.ஆறிய பின்பு இறுகி விடும்.அதனுள் கலக்கி வைத்துள்ள பிஸ்கட் கலவையை ஊற்றவும்.இட்லி சட்டியில் 1/4 பங்கு தண்ணீர் ஊற்றி அதனுள் ஒரு கலவடையை வைத்து அதன் மேல் பிஸ்கட் கலவை சட்டியை வைத்து மூடவும்.20 நிமிடங்கல் வேகவிட்டு எடுக்கவும்.ஆறியவுடன் ஒரு தட்டையில் தலை கீழாய் கவிழ்த்தால் மேலே brown கலரும்,உள்ளே மஞ்சள் கலரும் வரும்

குறிப்பு:

சீனி பாகு செய்தவுடன் சட்டியில் எல்லா பக்கமும் பரவும் படி செய்யவும்.வேகும் போது ஆவி நீர் புட்டிங்கில் ஊற்றாமல் இருக்க இட்லி சட்டியின் மூடியை ஒரு துணியால் கட்டிவிடவும்.

வழங்கியவர்

rasia_nisrina

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

7 நபர்கள் 20 நிமிடங்கள் 20 நிமிடங்கள்
  random food image


comments
சீனிபாகு
டிசம்பர் 13, 2007 - 3:48pm - வழங்கியவர் janu

அஸ்ஸலாமு அலைக்கும் நிஸ் ரீனா. . எனக்கு ஒரு சின்ன சந்தேகம். இறுகின சீனிபாகு மீண்டும் வேகவைக்கும் போது இளகிடாதா? மன்றத்துல ஒரு தரம் வந்தீங்க. அப்புறம் காணோமே. உங்க பிறந்தநாள் இந்த மாதம் தானே. முடிஞ்சுடுச்சு இல்லையா? வாழ்த்துக்கள். இன்ஷா அல்லாஹ் இந்த குறிப்ப செய்து பார்க்கிறேன்.

சீனி பாகு
டிசம்பர் 22, 2007 - 6:40pm - வழங்கியவர் rasia_nisrina

அஸ்ஸலாமு அலைக்கும் ஜானு, தாமதமாக பதில் எழுதுவதற்க்கு மன்னிக்கவும்.புட்டிங் வேகும் போது சீனி பாகு இளகி புட்டிங் டபுள் கலரில் வரும்.செய்து பாருங்கள்.இந்த மாதம் 10 ந் தேதி தான் என் பிறந்த நாள் முடிந்தது.வாழ்த்துக்களுக்கு நன்றி ஜானு.என் பெயர் ரஸியா பானு.என் மகள் பெயர் தான் நிஸ்ரினா.அவளுக்கு 6 மாதம் ஆகிறது.

அருமை
டிசம்பர் 26, 2007 - 3:22pm - வழங்கியவர் janu

வ அலைக்குமுஸ்ஸலாம், நலமா? இந்த புட்டிங்கை இன்று தான் செய்து பார்த்தேன்.நன்றாக இருந்தது. பிள்ளைகள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள். செய்வதற்கும் சுலபமாக இருந்தது.

ரஸியா(மேரி பிஸ்கேட் புட்டிங் )
டிசம்பர் 26, 2007 - 5:17pm - வழங்கியவர் Jaleela Banu

அஸ்ஸலாமு அலைக்கும் ரஸியா முன்று பாக்கெட் மேரி பிஸ்கேட் இரண்டு காலி மீதியை யாரும் திரும்பி கூட பார்க்கவில்லை அன்றே பார்த்து வைத்து விட்டேன். வெள்ளிகிழமை செய்யலாம் என்று இருக்கிறேன்.பெயரும் மேரி பிச்கேட் புட்டிங் என்று வைத்து இருக்கலாம்.

ஜலீலா

hai janu
டிசம்பர் 28, 2007 - 9:40pm - வழங்கியவர் rasia_nisrina

புட்டிங்கை செய்து பார்த்து பாராட்டியதற்க்கு நன்றி!பிள்ளைகள் விரும்பி சாப்பிட்டதாக சொன்னீர்கள்.ரொம்ப சந்தோஷம்.one more thanks to you.

மேரி பிஸ்கட் புட்டிங்
டிசம்பர் 28, 2007 - 9:51pm - வழங்கியவர் rasia_nisrina

அலைக்கும் அஸ்ஸலாம் ஜலீலா மேடம்.மேரி பிஸ்கட்டை காலி செய்தது யார்?நீங்களா?ஹாஹாஹா!பெயர் மேரி பிஸ்கட் புட்டிங்னு வைத்திருக்கலாமே என்று சொல்லிருந்தீர்கள்.நான் ஏன் அப்படி எழுதவில்லை என்றால்,மேரி பிஸ்கட்டுக்கு பதிலாக நீங்கள் விரும்பும் எந்த creamless பிஸ்கட்டையும் பயன்படுத்தலாம்.