தேவையானப் பொருட்கள்
- மேரி பிஸ்கட் - 15
- பால் - 1/2 லி
- சீனி - 1/4 படி
- முட்டை - 5
செய்முறை
- முதலில் பாலில் மேரி பிஸ்கட்டை 15 நிமிடம் ஊற வைக்கவும்.
- முட்டையையும்,சீனியையும் கலக்கவும்.
- ஊற வைத்த பிஸ்கட் + பாலை மிக்ஸியில் அடிக்கவும்.
- அதை முட்டை,சீனியுடன் சேர்க்கவும்.
- கேக் செய்ய கூடிய ஒரு வட்ட வடிவ பாத்திரத்தில் கொஞ்சம் சீனியை போட்டு அடுப்பில் குறைந்த தீயில் வைக்கவும்.சீனி உருகி brown கலர் வந்தவுடன் அடுப்பை நிறுத்தவும்.
- இதை ஆற விடவும்.ஆறிய பின்பு இறுகி விடும்.அதனுள் கலக்கி வைத்துள்ள பிஸ்கட் கலவையை ஊற்றவும்.இட்லி சட்டியில் 1/4 பங்கு தண்ணீர் ஊற்றி அதனுள் ஒரு கலவடையை வைத்து அதன் மேல் பிஸ்கட் கலவை சட்டியை வைத்து மூடவும்.20 நிமிடங்கல் வேகவிட்டு எடுக்கவும்.ஆறியவுடன் ஒரு தட்டையில் தலை கீழாய் கவிழ்த்தால் மேலே brown கலரும்,உள்ளே மஞ்சள் கலரும் வரும்
-
குறிப்பு
சீனி பாகு செய்தவுடன் சட்டியில் எல்லா பக்கமும் பரவும் படி செய்யவும்.வேகும் போது ஆவி நீர் புட்டிங்கில் ஊற்றாமல் இருக்க இட்லி சட்டியின் மூடியை ஒரு துணியால் கட்டிவிடவும்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
7 நபர்கள் |
20 நிமிடங்கள் |
20 நிமிடங்கள் |