சுண்டைக்காய் பச்சடி

தேதி: November 14, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சுண்டைக்காய் - 100 கிராம்
துவரம் பருப்பு [அ] பாசிப்பருப்பு - 100 கிராம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் - அரை தேக்கரண்டி
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
பச்சைமிளகாய் - 5 நம்பர்
புளி - கோலிக்குண்டு அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 50 கிராம்
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
தேங்காய் - 2 சில் (அரைக்கவும்)


 

பருப்பை 3/4 பாகத்திற்கு வேகவைக்க வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவற்றை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி இரண்டாக கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை வதக்கவும்.
சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி போட்டு, வதங்கியவுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் போட்டு நன்கு கிளறவும்.
அதில் ஒரு கிளாஸ் தண்ணீரில் புளியைக் கரைத்து ஊற்றி கொதித்தவுடன் பருப்பை ஊற்றி அரைத்த தேங்காயை ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.


மேலும் சில குறிப்புகள்