தேவையானப் பொருட்கள்
- சீனி - 6 - 7 மேசைக்கரண்டி
- கோன்பிளவர் - 1 1/2 மேசைக்கரண்டி
- கட்டிப்பால் (கன்டென்ஸ்டு மில்க்)- 4 மேசைக்கரண்டி
- பால் - 1 கப்
|
செய்முறை
- 4 மேசைக்கரண்டி சீனியை ஒரு பாத்திரத்தில் போட்டு நெருப்பில் வைக்கவும்.
- சீனி உருகி நிறம் மாறியதும் (பிரவுண்) எடுத்து ஒரு புடிங் கிண்ணத்தில் ஊற்றவும்.- காரமெல்
- கோன் ஃபிளவரில் 3 மேசைக்கரண்டி பாலை விட்டு கரைக்கவும்.
- கட்டிப்பால், மீதிப்பால், மீதி சீனி சேர்த்து நன்கு காய்ச்சவும்.
- பின்னர் இதனுள் கரைத்த கோன் ஃபிளவரை சேர்த்து கட்டி படாமல் கிளறவும்.
- கலவை சிறிது தடித்ததும் அதனை காரமெல் ஊற்றிய கிண்ணத்தில் ஊற்றி ஆறவிடவும்.
- சுவையான காரமெல் புடிங் தயார். தேவையானபோது எடுத்து பரிமாறும் தட்டில் கவிழ்த்துப் போட்டு பரிமாறவும். - கவிழ்த்துப் போடும் போது புடிங்கின் மேற்பகுதியில் காரமெல் வழிந்து பார்ப்பதற்கும் அழகான தோற்றத்தைத் தரும்
|
குறிப்பு:
விரும்பினால் பரிமறும் வரை புடிங் கிண்ணத்தை ஃபிரிட்ஜில் வைத்து குளிர விட்டும் எடுக்கலாம். காரமேலில்/கட்டிப்பாலில் உள்ள இனிப்பு சுவை போதும் என நினைப்பவர்கள் புடிங் காய்ச்சும் போது சீனி சேர்க்க வேண்டாம்.
வழங்கியவர்
Mrs. B. Narmatha
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
5 நிமிடங்கள் |
~15 நிமிடங்கள் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
9 நிமிடங்கள் 14 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 37 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 56 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 38 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 17 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 22 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்பு -
11 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு -