தேவையானப் பொருட்கள்
- பழுத்த எலுமிச்சை - 10 - 12
- உப்பு - 1/4 கப்
- வினிகர் - 1/4 கப்
- சீனி - 1/2 கப்
|
செய்முறை
- எலுமிச்சம் பழங்களை பாதியாக வெட்டி வைக்கவும்.
- வினிகரில் சீனி, உப்பு கலந்து மிதமான சூட்டில் காய்ச்சவும்.
- பின்னர் அதனுள் எலுமிச்சம் பழங்களை போட்டு அவிய விடவும்.
- எலுமிச்சம் பழங்கள் நன்கு அவிந்து மென்மையானதும் நசித்து விடவும்.
- கரைசல் தடித்ததும் இறக்கி ஆறவிட்டு சுத்தமான காய்ந்த போத்தலில் போட்டு மூடி ஒரு வாரத்திற்கு ஊற விடவும்.
- பின்னர் எடுத்து குலுக்கிவிட்டு தேவையான போது சுத்தமான காய்ந்த கரண்டியால் எடுத்து உபயோகிக்கலாம்.
- பாண், ரொட்டி, நாண் என்பவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். சுவையாக இருக்கும். லேயர் எலுமிச்சை கேக்கிற்கும்(Lemon cake) இடையில் வைக்கும் ஃபில்லிங்காக பாவிக்கலாம்.
|
குறிப்பு:
வினிகர் இல்லாவிட்டால் வேறு எலுமிச்சையில் சாறெடுத்தும் பாவிக்கலாம். வினிகர் சேர்த்தால் சிறிது நாட்கள் கூடுதலாக கெடாமல் இருக்கும்.
வழங்கியவர்
Mrs. B. Narmatha
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
5 நிமிடங்கள் |
30 - 40 நிமிடங்கள் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
13 நிமிடங்கள் 28 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 36 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் ஒரு நிமிடம் முன்பு -
2 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 53 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 22 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்பு -