மொச்சை வறுவல்

தேதி: November 15, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மொச்சை - 200 கிராம்
வெங்காயம் - 3
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 8 பல்
இஞ்சி - சிறு துண்டு
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

மொச்சையை உப்பு போட்டு வேகவைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை அரைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க உள்ளதைப் போட்டு தாளித்தவுடன், வெங்காயத்தை நீளமாக நறுக்கி வதக்கி, அரைத்த இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்கவும்.
அதில் பொடியாக நறுக்கின தக்காளி, இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் போட்டு, 1/2 கிளாஸ் தண்ணீர் விட்டு கொதித்தவுடன், மொச்சையைப் போட்டு குறைந்த தீயில் வதக்கி, நீர் வற்றியவுடன் இறக்கவும்.


பச்சை மொச்சையிலும் செய்யலாம். காய்ந்த மொச்சையில் செய்வதென்றால் முதல் நாளே மொச்சையை தண்ணீரில் ஊற வைத்து செய்யவேண்டும்.

மேலும் சில குறிப்புகள்