ஊர்ப்பாடல்கள்

அன்பார்ந்த அறுசுவை அங்கத்தினர்கள் அனைவருக்கும் வணக்கம்.
இந்த திரியானது உர்ப்பாடல்களுக்காக அறிமுகமாகிறது.
எங்கே பாடுங்கள் உங்கள் ஊர்ப்பாடல்கலை இங்கே!

உதாரணம்:
1. மதுரைக்கு போகதடி அந்த மல்லிகைப்பூ கண்ணு வைக்கும்
தஞ்சாவூர் போகதடி தளியாட்டாம பொம்மை நிக்கும்
துதுக்குடி போனா சில கப்பல் தரை தட்டும்
கொடைக்கானல் போனா மேகம் ஒன்ன சுத்தும் (அழகிய தமிழ் மகன்)

2. மானாமதுரை குண்டுமல்லிகை வாடமனா தலையில் சுஉடுற வா மாமா.... (மேட்டுக்குடி)

இப்படிக்கு
இந்திரா

நல்ல பாடல். சினிமா பாடல்கள் போல் இல்லை. இது நன்றாக இருக்கின்றது:-) நாகையையும், நாகை வாழ் மீனவக் குடும்பங்களின் நிலையையும் பாட்டில் வடித்தமைக்கு மிக்க நன்றி.

கடற்கரை நகரம் என்பதால் நாகை என்றவுடன் எல்லோருக்கும் புயல்தான் நினைவிற்கு வரும். கல்லூரியில் படிக்கும்போது ஊர் பெயரைச் சொன்னாலே வெளிமாவட்ட சக மாணவர்கள் கேட்பார்கள். உங்க ஊருல புயல் அடிக்கடி வருமே என்று. இரண்டு நாட்களுக்கு முன்பு டிவியில் ஏதோ ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது. அதில் டெல்லி கணேஷ் ஒரு டயலாக் பேசுகிறார். வரிசையாக எதைஎதையோ சொல்லி, நாகப்பட்டினம் என்றால் புயல்.. இதெல்லாம் மாற்ற முடியாது என்பார்.

இந்த ஊரில் 28 வருடங்களாக இருக்கின்றோம். எனக்கு தெரிந்து ஒருமுறை மட்டுமே புயல் வீசியுள்ளது. 94 ஆம் வருடம். அந்த புயல் காரைக்காலைத்தான் அதிகம் பாதித்தது. அதற்கு முன்பு 77 ல் ஒரு பெரும் புயல் வீசியது. அதுதான் நாகையை பெரிதும் உலுக்கியது. அப்போது நாங்கள் வேறு ஊரில் இருந்தோம். அதற்கும் முன்பு 50களில் ஒரு புயல் கடுமையாக நாகையை தாக்கியதாக சொல்வார்கள். ஆந்திரா, ஒரிஸ்ஸா மாநில கடற்கரை நகரங்களை ஒப்பிடுகையில் நாகையில் புயல் என்பது அபூர்வமானதுதான். ஆனால் அவை உண்டாக்கிய அழிவு ஒரு நிரந்தர அடையாளத்தை தந்துவிட்டது.

2004 க்கு பிறகு புயல் அடையாளம் மறைக்கப்பட்டு சுனாமி முத்திரை குத்தப்பட்டுவிட்டது. உலகளவில் நாகப்பட்டினம் பிரபலமானது 2004ல்தான். இந்த பிரசித்தம் எல்லாம் கடும் இழப்பினால் வந்தவை. ஏழ்மையினால் சோமாலியா எப்படி உலகளவில் பிரபலமானதோ அதுபோல் இயற்கை சீற்றத்தால் உண்டான இழப்புகளினால் நாகையும் பிரபலமாயிற்று. இதில் எங்களுக்கு பெருமை இல்லை. :-(

உண்மையில் நாகையின் பெருமையை உரைக்கும் நல்ல விசயங்கள் நிறையவே இருக்கின்றன. ஆனால் அவை அதிகம் பேசப்படுவதில்லை. சரித்திரப் பெருமை வாய்ந்த, பழமையான நகரம். தமிழகத்தில் நெல் அதிகம் உற்பத்தி செய்யும் மாவட்டம். நல்ல அறிஞர்கள், கலைஞர்கள் ஏராளமானோரைத் தந்த மாவட்டம். ஏராளமான புண்ணிய ஸ்தலங்கள் உள்ள மாவட்டம். மும்மதமும் சங்கமம் ஆகி, பிரச்சனைகள் இன்றி மக்கள் ஒற்றுமையாய் வாழும் மாவட்டம். நாகை நகரில் மட்டும் 100க்கும் அதிகமான கோயில்கள் இருக்கின்றன. இங்கே உள்ள 75 சதவீத தெருக்களின் பெயர்கள் கோயில் பெயரைக் கொண்டுதான் இருக்கும். (நாணயக்கார வீதி என்பது நிறைய நகரங்களில் இருக்கும். பொற்கொல்லர்கள் (நகைக்கடைகள்) இருக்கும் வீதியை நாணயக்கார வீதி என்பார்கள்.)

நல்ல விசயங்கள் மூலம் நாகை பிரபலம் அடைய வேண்டும் என்பது எனது விருப்பம். நான் பிடிவாதமாக அறுசுவையை நாகையில் இருந்து நடத்துவதற்கு இதுவும் ஒரு காரணம்.

நாகையை குறித்து ரொம்ப தெரிந்து கொள்ள ஆசை..நேரில் வந்தால் எப்படி?அங்கு தங்கிப் பார்க்கலாமா?
சுஹைனா பாராட்டுக்கள்..தமாஷ் போல கவிதை கொடுத்தாலும் ஒரு மாதிரி சங்கடமா இருந்தது..நான் மலயாள செம்மீன் படத்தை கற்பனையில் கொண்டு வாசித்தேன்.நன்றி.

இந்த ஆதிவாசி சமூகமும் அப்படி தானே..சொல்லப் போனால் உண்மையான நாடன் மனிதர்கள் அவர்கள் தான்..நாமெல்லாம் பூசி மொழுகப்பட்ட சிலைகள்..ஆனால் அவர்களுக்கு அந்தஸ்து இல்லை படிப்பும் இல்லை வேலையும் இல்லை எல்லாவிடத்திலும் விரட்ட படுகிறார்கள்.அது போலத் தான் சில நல்ல விஷயங்கள் நிரந்தரமாக என்றுமே மறைக்கப் படுகிறது

அருமையாக விளக்கிவிட்டீர்கள்.கல்லூரி சமயம் டூர் வந்திருக்கிறேன்,அன்னை வேளாங்கன்னி கோயில்,நாகூர் தர்கா,சிக்கல் முருகன் கோவில்,பூம்புகார் ,தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்,அப்பா இன்னும் எத்தனை சிறப்புகள்.உங்கள் மூலம் நிறைய தெரிந்துகொண்டோம்.நன்றி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

தென்மதுரை வைகை நதி தினம் பாடும் தமிழ் பாட்டு

ஊரோடு ஒத்து வாழ்
நிஷாந்தி

நிஷா

மேலும் சில பதிவுகள்