செள செள பீர்க்கை கூட்டு

தேதி: November 15, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

செள செள -1
பீர்க்கை-2
தேங்காய்த்துருவல்-ஒரு கை
ஜீரகம்-அரை ஸ்பூன்
மிளகு- அரை ஸ்பூன்
மிளகாய்த்தூள்- அரை ஸ்பூன்
கொத்தமல்லித்தூள்- அரை ஸ்பூன்
சின்ன வெங்காயம்-10
தக்காளி-2
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
தேவையான உப்பு
எண்ணெய்-4மேசைக்கரண்டி
துவரம் பருப்பு- கால் கப்
கொத்தமல்லித்தழை [பொடியாக அரிந்தது]- கால் கப்


 

காய்களை சற்று பெரிய துண்டுகளாய் அரிந்து கொள்ளவும்.
பருப்பைக் குழைய வேகவைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
சிறிய வெங்காயத்தைப் பொடியாக அரிந்து போட்டு வதக்கவும்.
தக்களியை பிசைந்து சேர்த்து குழைய வதக்கவும்.
காய்கறிகள், தூள்கள், 2 கப் நீர் சேர்த்து வேகவைக்கவும்.
முக்கால்வாசி வெந்ததும் தேங்காய், மிளகு, ஜீரகம் இவற்றை மையாக
அரைத்துச் சேர்க்கவும்.
பருப்பையும் சேர்க்கவும்.
காய்கறிகள் முழுமையாக வெந்ததும் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று உங்கள் செள செள பீர்க்கை கூட்டு செய்தேன் சுவையாக இருந்தது. நானும் செய்வேன் ஆனால் வெங்காயம், தக்காளி சேர்க்கமாட்டேன். இந்த கூட்டு சுவையாக இருந்தது. குறிப்பிற்கு மிக்க நன்றி.

என்றும் அன்புடன்.
மைதிலி.

Mb