குபூஸ்(அரேபியன் ரொட்டி) சமையல் குறிப்பு - 6215 | அறுசுவை


குபூஸ்(அரேபியன் ரொட்டி)

food image
வழங்கியவர் : Jaleela Banu
தேதி : வியாழன், 15/11/2007 - 23:56
ஆயத்த நேரம் : 3hr 20 min
சமைக்கும் நேரம் : 30 min
பரிமாறும் அளவு : 3 person

 

 • மைதா - மூன்று டம்ளர்
 • ஈஸ்ட் - ஒரு பின்ச்
 • சர்க்கரை - இரண்டு தேக்கரண்டி
 • சூடான பால் - அரை டம்ளர்
 • உப்பு - அரை தேக்கரண்டி
 • பட்டர் - ஐம்பது கிராம்

 

 • சூடான தண்ணீரில் உப்பு, சர்க்கரை, சூடான பால், ஈஸ்ட், பட்டரை உருக்கி போட்டு கலக்கி கோதுமை, மைதா கலவையில் கலக்கவும்.
 • ஒரு கட்ட கரண்டி வைத்து கலக்குங்கள் அப்ப தான் கையில் மாவு ஒட்டாது கலக்கி நல்ல குழைத்து மூன்று மணி நேரம் அப்படியே வைக்கவும்.
 • மாவை சற்று தளர்த்தியாக குழைக்க வேண்டும்.
 • பிறகு அதை எடுத்தால் புஸ் என்று உப்பி இருக்கும்.
 • அதை எடுத்து மறுபடியும் குழைத்து ஒரு கமலா பழம் சைஸ் உருண்டை எடுத்து நல்ல நிறைய மைதா மாவு தடவி நடுவிலிருந்து உருட்டவும்.
 • தேய்க்கும் போதே நல்லா சூப்பரா ரவுண்டு ஷேப் வரும் அதை எடுத்து தவாவில் போட்டு சுட்டெடுக்கவும். நல்ல பொங்கி வரும்.
 • சூப்பரான குபூஸ் ரெடி.
 • இதற்கு தொட்டு கொள்ள எல்லாவகையான குருமாக்கள், சிக்கன், ஹமூஸ், கார்லிக் பேஸ்ட், க்ரில்டு சிக்கன் எல்லாமே பொருந்தும்.
துபாய் மற்றும் சவுதியில் அரேபியர்கள் உடைய பேமஸான ரொட்டி இந்த குபூஸ். இந்த குபூஸ் இல்லாமல் அவர்களுக்கு சாப்பாடு கிடையாது. எல்லா வகையான சாண்ட்விச்சுக்கும் இந்த ரொட்டி தான் உபயோகபடுத்துவார்கள். க்ரில்லில் சுடும் சிக்கன் அயிட்டங்களுக்கும், BBQ அயிட்டங்களுக்கும் தொட்டு சாப்பிடலாம். சில்லி சிக்கன், பட்டர் சிக்கன் போன்றவைக்கும் தொட்டு கொள்ள நல்ல இருக்கும். குழந்தைகளுக்கு பட்டர் தடவியும் கொடுக்கலாம். இதை கோதுமை மாவிலும் செய்யலாம்.


ஜலீலா(அரெபியன் ரொட்டி)

ஜலீலா, நேற்று இந்த ரொட்டியை செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. இங்கு இதை பீட்டா ப்ரெட் என்பர். நான் அதை வெறும் மைதா மாவில் செய்து பார்த்து நொந்து போயிருக்கிறேன். இது சூப்பராக இருந்தது. வீட்டிலும் செம ஹிட். நன்றி உங்களுக்கு

வினி (குபூஸ்)

வினி
இந்த ரொட்டி செய்து பார்த்ததற்கு ரொம்ப நன்றி.
அது உருட்டும் போது ரொம்ப ஸ்மூத்தாக வரும் அப்போது இத்தனை ரொட்டி வேனும் நாளும் சுட்டுக்கொண்டே இருக்கலாம் என்று தோனும்.
ஜலீலா

Jaleelakamal

சென்னையில் ரதா கிருஷ்ணன்

நீங்கள் மாவை முன்று மணி நேரம் ஊற வைத்தீர்களா?
ஊறவைத்திருந்தால் கண்டிப்பிப்பாக ஸ்மூத்தாக வரும்.
ஏதாவது தப்பு பண்ணி இருப்பீர்கள்.

நான் மதியம் குழைத்து விட்டு நைட் வந்து சுடுவேன் சூப்பரா வரும்.

ஒகே மறுபடியும் டிரை பண்ணுங்கள்

சென்னையில் ரதா கிருஷ்ணன் சாலையில் உள்ள நீல்கிரீஸில் இந்த குபூஸ் கிடைக்கிறது.
போய் வாங்கி கொள்ளுங்கள்.

ஜலீலா

Jaleelakamal

ஜலிலாக்கா & யார் லைனில் உண்டா?

ஜலிலாக்கா லைனிலா இஉர்க்கீங்க?>அடிக்கடி லோ பிபி க்கா நீங்க சொன்னதைலம் பண்ணிட்டேன்.படுத்தால் மட்டுமே போகுது என்ன பண்ண?அல்லாஹ்தான் சிபா தரனும்..துஆ கேளுங்க..கஸ்டமா இருக்கு..

அப்புறம் தோசை மாவு கொஞ்சம் புளிக்குது..என் வாப்பா கொஞ்சம் புளித்தாலும் சாப்டமாட்டாங்க..அதுக்கு ஏதாவது டிப்ஸ் கொடுங்க உடனே...நேற்று வெள்யே சாப்டதான் நேற்றைக்கே காழியாகும் மாவு மீர்ந்துட்டு இப்ப புளிப்பு..அதிகமா இருக்கு கீழே கொட்டவும் மனம் இல்லை..இப்போதய்க்கு என்னால் ரிஸ்க் எடுத்து வேறு டிபன் பண்ண முடியாது..ரொம்ப டயர்ட்...வேறு யாராவது லைனில் இருந்தால் உங்களுக்கு தெரிங்சால் சொல்லுங்க பிளீஸ்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அய்யோ

அய்யோ குறிப்பில் போட்டு இருக்கேன் போட்டபிந்தன் பார்த்தேன் நல்லவேளை இது உங்கள் குறிப்பா இருந்தது கோச்சுக்காதீங்க நல்லா அக்காத்தானே ;-)அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆஹா குலசை அண்ணா

ஆஹா குலசை அண்ணா ஏன் சென்னையி கிடைக்கல தாராலமா கிடைக்கும் நான் அடிக்கடி சாப்பிடும் ஐடம் இது,ஷவர்மா லாம்தான் சாப்டனும்னு தோனிச்சுனா இவர்ட சொன்னா போதும் கிரில் சிக்கனுடன் எல்லாம் வந்துடும்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அன்பு மர்ழியா,

அன்பு மர்ழியா,
தோசை மாவு புளித்தால் சமையல் சோடாவை ஒரு பின்ச் தண்ணீரில் கலந்து மாவில் கொட்டி கிளறி தோசை வார்த்தால் புளிப்பாக இருக்காது.

ஹாய் சுபா

ஹாய் சுபா நலமா?பிள்ளை நலமா?அதெல்லாம் ஆல்ரெடி பண்ணியாச்சும்மா..எல்லாம் கலக்கி வைத்தாச்சு..மெனக்கெடுத்து எனக்காக பதில் தந்தமைக்கு தேங்ஸ்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அன்பு மர்ழியா, 2

அன்பு மர்ழியா,
தோசை மாவு புளித்தால் சமையல் சோடாவை ஒரு பின்ச் தண்ணீரில் கலந்து மாவில் கொட்டி கிளறி தோசை வார்த்தால் புளிப்பாக இருக்காது.
மேலும் தோசை தான் சுடனும் வேறு எதுவும் முடியாது எனும் போது கோதுமை மாவை தண்ணீரில் கரைத்தும் ரவையை அப்படியே போட்டு உப்பு சேர்த்து நன்கு கரைத்தும் தோசை வார்க்கலாம் நன்றாக இருக்கும்.

இல்லை மேலே சொன்ன ரவை, கோதுமை மாவு சேர்த்து அதனுடன் சின்ன வெங்காயம் பொடிதாக நறுக்கி, சீரகம் சேர்த்தும் தோசை வார்க்கலாம்.
மிகவும் நன்றாக இருக்கும்.

ஓகே மர்ழியா,

ஓகே மர்ழியா,
குழந்தை நல்லா இருக்கான்.
இந்த வெயில் காலத்தில் 2 நாட்கள் தான் மாவு புளிக்காமல் தாங்கும் !!
அதற்கு இது தான் வழி