டூப்ளிகேட் பாதாம் அல்வா

தேதி: November 16, 2007

பரிமாறும் அளவு: 6 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - 4
சர்க்கரை வள்ளிக் கிழங்கு - 1
பால் - 1/4 கப்
நெய் - 1/2 கப்
சர்க்கரை (தேவையான அளவு)
பாதாம் எசென்ஸ் - 1/4 டீஸ்பூன்


 

உருளைக்கிழங்கையும், சர்க்கரை வள்ளிக்கிழங்கையும் தனித்தனியே வேக வைத்து உரித்து, மசித்து பால் சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றிக்கொள்ளவும்.
விழுது உள்ள அளவு சர்க்கரை எடுத்துக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் அரைத்த விழுது, சர்க்கரை, நெய் சேர்த்து சுருளக் கிளறவும்.
ஒட்டாமல் வரும் பதத்தில் பாதாம் எசென்ஸ் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
அசல் பாதாம் அல்வா போலவே இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

உண்மையில் ரொம்ப நல்லா இருந்துச்சு. நன்றி மாமி. டூப்லிகேட் ஒரிஜினல் மாதிரியே இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா