முருங்கைக்காய் குழம்பு

தேதி: November 16, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முருங்கைக்காய் - 2
வெங்காயம் (சிறியது) - 10
பூண்டு - 8 பல்
தக்காளி - 3
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சாம்பார் பொடி - 4 மேசைக்கரண்டி
(அல்லது)
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - 3 சில்
எண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி (தாளிக்க)


 

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு பொரியவிட்டு, வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
2 இன்ச் அளவிற்கு முருங்கைக்காயை நறுக்கி போட்டு வதக்கி, அதில் சாம்பார் பொடி (அல்லது) மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள் உப்பு போட்டு 3 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவேண்டும்.
குழம்பு நன்கு கொதித்தவுடன் தேங்காயை அரைத்து ஊற்றி நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சரஸ்வதி அக்கா முருங்கங்காய்க்குள் வெந்தயம்தான் சேர்ப்பேன். ஆனால் உங்கள் முறைப்படி உழுந்து சேர்த்து செய்தேன் சுவையாக இருந்தது.

சுரேஜினி