காலிஃப்ளவர் குருமா

தேதி: November 16, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (4 votes)

 

காலிஃப்ளவர் - ஒன்று
வெங்காயம் - 2
தக்காளி - 3
பச்சைமிளகாய் - 8 நம்பர்
தேங்காய் - ஒரு மூடி
பொட்டுக்கடலை - 50 கிராம்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் - 2 நம்பர்
பட்டை, காய் - ஒரு நம்பர்
இஞ்சி - ஒரு சின்ன துண்டு
பூண்டு - 7 பல்
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கசகசா - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
சோம்பு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ - ஒன்று


 

ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சோம்பு, ஏலக்காய், கசகசா, தேங்காய், பொட்டுக்கடலை, 5 பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை வதக்கிக் கொள்ளவேண்டும். வதக்கியவைகளை ஆற வைத்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சோம்பு, வெந்தயம் பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி 2 மிளகாய் கீறிப்போட்டு காலிஃப்ளவரை சிறிதாக நறுக்கி போட்டு கிளறவும்.
அதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு, அரைத்த கலவையை ஊற்றி மேலும் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அடுப்பிலிருந்து இறக்கியவுடன் கொத்தமல்லித்தழை தூவவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Mrs.Saraswathi,

Thanks for this Recipe, it came out well and my family enjoyed with Chappathi.

தாங்கள் செய்து சாப்பிட்டமைக்கு நன்றி. சப்பாத்தி மட்டுமல்ல சாதத்திற்கும் சாப்பிட சூப்பராக இருக்கும்.
திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

அன்பான சரசுவதி மடம்
இன்ருபொல் சந்தொசமக பல்லன்டு வால எல்லாம் வல்ல இரைவனை வன்டுகிரன்.
இப்பம் தான் தமிழ் ட்ய்ப் பன்ரன் எழுத்து பிலைக்கு மன்னிக்கம்

திருமணநாள் வாழ்த்து அனுப்பியதற்கு மிக்க நன்றி. தமிழில் அடிக்க சீக்கிரம் கற்றுக்கொள்ளவும். ஈஸிதான்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

Think Twice before you do!

Think Twice before you do!

கவனிக்கவில்லை. இப்போது திருத்திவிட்டேன். நன்றி.
THANKYOU FOR YOUR ADVICE.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

Think Twice before you do!
I Tried this it was tasty.I also tried with cauliflower instead of chenna it so delicious.keep it up

Think Twice before you do!