கார சட்னி

தேதி: November 16, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

சிறிய வெங்காயம்-15
மிளகாய் வற்றல்-8
தக்காளி-2
கடலைப்பருப்பு- 2 மேசைக்கரண்டி
புளி- அரை நெல்லி அளவு
தேவையான உப்பு
நல்லெண்ணெய்- 2 மே.க


 

கடலைப்பருப்பையும் மிளகாயையும் சிறிது எண்ணெயில் சிவக்க வறுக்கவும்.
அதே எண்ணெயில் சிறிய வெங்காயம், தக்காளியையும் வதக்கி அனைத்தையும் புளி உப்புடன் அரைத்தெடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை
அன்பு மனோவுக்கு,
தாங்கள் செஞ்சுரி அடித்தமைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன் சரஸ்வதி

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

தங்களின் அன்பான பாராட்டிற்கு என் நன்றி. ரொம்ப நாட்களாக உங்களின் சுவையான சமையல் பக்குவங்களை கவனித்து வருகிறேன். அண்மையில் திரு. பாபுவிடமும் உங்களைப்பற்றி விசாரித்தேன். தொடர்ந்து சுவையான குறிப்புகளைக் கொடுங்கள்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை
Hi Mano,
உங்கள் பதில் பார்த்தேன். மிக்க நன்றி. திரு.பாபுவை எப்படி தொடர்பு கொள்ளவேண்டும் என்று தெரியவில்லை. ஆஸ்திரேலியாவில் என் மருமகள் சமையல் குறிப்பு எழுதுங்கள் என்று ஆரம்பித்து கொடுத்தாள். ஆதலால் பாபுவின் தொடர்பு தெரியவில்லை. நன்றி.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

அறுசுவைப்பக்கத்தின் கீழ் ' தொடர்புக்கு' என்ற வரியை ' க்ளிக்' செய்து திரு. பாபுவிற்கு எழுதலாம்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை
நன்றி மனோ
எப்படி தொடர்பு கொள்ளவேண்டும் என்று தெரிவித்தமைக்கு
மிக்க நன்றி.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

நேற்று இந்த காரசட்னி செய்தேன், நல்ல காரமாக சுவையாக இருந்தது. நான் சிறிது எண்ணை செர்த்து சாப்பிட்டேன். சி.வெங்காயம் இல்லையென்பதால் பெ.வெங்காயம் சேர்த்தேன்.
மிக்க நன்றி.

மாலினி

அன்புள்ள மாலினி!!

காரச்சட்னியை செய்து பார்த்ததும், அது சுவையாக வந்ததும் அறிய மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். சிறிய வெங்காயம் மேலும் சுவையைத்தரும்.

மனோ ஆன்டி இன்று இரவு இட்லிக்கு உங்க காரச்சட்னி சூப்பர்!!!உங்க குறிப்புக்கு நன்றி!!!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

காரச் சட்னி சூப்பராக இருந்தது என்ற உங்களின் அன்பான பின்னூட்டம் எனக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தது. உங்களுக்கு என் அன்பான நன்றி!

மனோ மேடம், இந்த சட்னியை செய்தேன். தோசைக்கு சூப்பராக இருந்தது. நன்றி உங்களுக்கு.

அன்புள்ள வானதி!

காரச் சட்னி நன்றாக இருந்ததென்ற அன்பான பின்னூட்டத்திற்கு என் மகிழ்வான நன்றி!!

உங்களுடைய கார சட்னி மிகவும் சூப்பர்…நன்றாக இருந்த்து..எங்கள் வீட்டிலும் இப்படி தான் செய்வேன்..ஆனால் கடலைபருப்பு சேர்க்க மாட்டோம்..ஆனால் சேர்த்து செய்த்து..கொஞ்சம் வித்தியசமாக இருந்த்து…கடைசியாக தாளிப்பும் சேர்த்து கொண்ட்டேன். குறிப்புக்கு நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

தோசைக்கு இந்த சட்னி ரொம்ப நல்லா இருந்தது.நான் காரம் கொஞ்சம் குறைத்துபோட்டேன்.நன்றி

சவுதி செல்வி