எள்ளுப் பொடி - 2

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய்வற்றல் - 4
எள் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - சிறு துண்டு
உப்பு - அரை தேக்கரண்டி


 

வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் எள்ளை வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, மிளகாய்வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் போட்டு உப்பு சேர்த்து நன்கு பொடி செய்துக் கொள்ளவும்.
அதன் பிறகு வறுத்து வைத்த எள்ளை சேர்த்து அரைத்து பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
இதில் எள் சாதம் செய்தால் மிகவும் வாசனையாகவும், ருசியாகவும் இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்