சதமடித்த சகோதரி மனோ சுவாமிநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....

அன்பு சகோதரி மனோ,
எங்களையெல்லாம் ரொம்பவே காக்க வைத்து சதமடித்து விட்டீர்கள்.(டெண்டுல்கர் ரசிகையோ!) உங்களைப் பார்த்துத்தான் குறிப்புகள் எப்படி கொடுப்பது என்று நான் தெரிந்து கொண்டேன். எளிமையான, சுவையான குறிப்புகள். காய்கறி கீரை மறக்கவே முடியாது. எனது மனமார்ந்த பாரட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் (அப்பா, இப்பவாவது நான் ஃபர்ஸ்டா சொல்லிட்டேனே!).
அன்புடன்,
செல்வி.

வாழ்த்துக்கள் திருமதி மனோ. ஸ்லோ அன்ட் ஸ்டடி வின் த ரேஸ் என்பது இது தானா.மிகவும் சுவையான அதிலும் பெரும்பாலும் பாரம்பரிய குறிப்புகளாகக் கொடுத்து அறுசுவையில் முதல் சதத்தைத் தொட்டுவிட்டீர்கள் பாராட்டுக்கள். இதைப் போலவே தொடர்ந்து பல நூறுகளைத் தொட எனது அன்பான வாழ்த்துக்கள்.நன்றி.(அக்கா நீங்க கவாஸ்கர் ரசிகை தானே? செல்வி தப்பா தானே கணிச்சிருக்காங்க!!!!!)

நூறு குறிப்புகளை எங்களுக்கு கொடுத்த திருமதி.மனோ அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். மேன்மேலும் பல குறிப்புகளை கொடுத்திட வாழ்த்துகிறேன்.

100 குறிப்புக்கள் கொடுத்த உங்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் !!!!
-நர்மதா

அன்புள்ள மேடம் மனோ!
நலமாக இருக்கீங்களா!பாரம்பரிய மிக்க சமையல்களாக நீங்கள் குடுத்துவருவது உண்மைதான்,எங்களைப்போல் இளந்தலை
முறைக்கு மிக்க உதவியாகவே உள்ளது!பாராட்டுவதர்க்கு வயதில்லை,மனமார வாழ்த்துகிறேன்!

anbudanஹாய் மனோ மேடம்,

மேலும் பல குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்..

என்றும் அன்புடன்,
வித்யாவாசுதேவன்.

anbudan

அன்புள்ள மனோ மேடம்,

எப்ப சதம் அடிப்பீங்க, முதல்ல வாழ்த்தனும்னு வெயிட் பண்ணிட்டே இருந்தேன் :-) ஆனா நீங்க எப்பவோ சதம் அடிச்சு முடிச்சிட்டீங்க:-) வாழ்த்துக்கள் மேடம் :-) ரொம்ப லேட்டா வாழ்த்தறதுக்கு மன்னிச்சுக்கோங்க.

உங்க அதிரசம் சென்சு அது நல்லா வந்துச்சு:-) ஆனா அதை எழுத வந்து வேற ஏதோ எழுதிட்டு போயிட்டேன்:-) ஆனா, உங்களுக்கு இந்த வாழ்த்துக்களோடு அதையும் தெரியப்படுத்திடறேன். ரொம்ப அருமையா வந்தது. உங்க குறிப்பு அனைத்துமே எனக்கு ரொம்ப பிடிக்கும். மத்த சைட்லயும் உங்க குறிப்பு பாத்து, எடுத்திருக்கேன், முன்னயெல்லாம் :-) அறுசுவைக்கு வந்தப்புறம், வேற்ற சைட்கே போறதில்ல:-)

இன்னும் நிறைய நிறைய குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள் :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

லேட்டா முடித்தாலும் லேட்டஸ்ட்டா முடித்த அத்தையம்மாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பின்ன என்ன! தம்பிக்கு அத்தைன்னா அக்காவுக்கும் அத்தைதானே.

உங்களுடைய மாஸ்டர் பீஸ் குறிப்பு - காய்கறி கீர் -
இன்னும் பல குறிப்புகள் கொடுத்து அனைவரையும் அசத்த வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெயந்தி

அன்புள்ள மனோ மேடம்,
சுவையான 100 குறிப்புகள் கொடுத்து எங்களை மகிழ்வித்தமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். உங்க காய்கறி கீர் தான் உங்க குறிப்புகள்ள நான் முதன் முதலில் செய்தது.சூப்பரான சுவை.அருமையா இருந்தது.மேலும் பல நூறு குறிப்புகளை உங்களிடம் எதிர்பார்க்கிறோம்

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

அன்புள்ள செல்வி!

வாழ்த்துக்கு நன்றி! ஆமாம், அதென்ன சச்சின் டெண்டுல்கர் மீது அப்படி ஒரு கோபம் உங்களுக்கு? பாவம், அவர் இப்போதுதானே தேங்கி நிற்கிரார்? அதி வேகமாக எத்தனையோ சதம் அடித்தவராயிற்றே உங்களை மாதிரி? நானோ, அறுசுவையின் ஆரம்பத்திலிருந்தே மெதுவாகத்தான் இருந்து வந்திருக்கிறேன். வாழ்க்கையின் மற்ற பொறுப்புகளின் முன்னால் இந்தக் கடமை சற்று பின்தங்கித்தான் எப்போதும் உள்ளது!

அன்பு சகோதரி மனோகரி!

உங்கள் வாழ்த்துக்களுக்கு என் மகிழ்வையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீங்கள் சொல்வது சரியே. கவாஸ்கர் மெதுவாகத்தான் சதமடிப்பார் என்னைப்போல! ஒரு காலத்தில் அவருடைய ரசிகைதான் நான் என்றாலும் தற்போது எங்களின் குடும்பமே டெண்டுல்கரின் பின்னால்தான்!!
முன்பே நான் எழுதியது போல, என் மகனுக்குப் பெண் தேடும் வேலையில் நான் தஞ்சைக்கும் துபாய்க்கும் தொடர்ந்து அலைந்து கொண்டிருப்பதால் சதமடிக்கும் ரேஸ்களில் நான் எப்போதுமே இருந்ததில்லை. முதலில் இல்லப்பொறுப்புகள்- உடலுக்கு ஓய்வு கிடைத்த பின்புதான் மனதிற்கு ஓய்வு கிடைத்து என் அனைத்து கலைகளிலும் தொடர்ச்சியாக இறங்க வேண்டும்!!

மேலும் சில பதிவுகள்