உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

வனிலா ஐஸ்கிறீம்

 

இந்த குறிப்பு எனக்கு தெரிந்த ஒருவர் கூறியது. மிகவும் சுலபமாக இருந்ததால் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது.

தேவையானப் பொருட்கள்

  • கட்டிப்பால் - 1/4 கப்
  • பால்மா - 1/2 கப்
  • தண்ணீர் - 3/4 கப்
  • வனிலா எஸன்ஸ் - 1/4 தேக்கரண்டி

செய்முறை

  • கட்டிப்பாலினுள் 1/4 கப் தண்ணீர் விட்டு வனிலா சேர்த்து கரைக்கவும்.
  • பால்மாவை மீதி 1/2 கப் தண்ணீரில் கட்டி இலாமல் கரைக்கவும்.
  • இரண்டையும் தனித்தனியே ஃபிரீஸரினுள் 1/2 மணித்தியாலம் வைத்து எடுக்கவும்.
  • ஒரு பெரிய பாத்திரத்தில் குளிர் தண்ணீர் நிரப்பி அதனுள் பால்மா கரைசல் பாத்திரத்தை வைத்து பீட்டரால் அல்லது கரண்டியால் நன்கு பொங்க பொங்க அடிக்கவும்.
  • பின்னர் இதை கட்டிப்பால் கரைசலினுள் சேர்த்து மெதுவாக கலக்கவும். அடிக்க வேண்டாம்.
  • பின்னர் ஒரு தட்டையான பாத்திரத்தில் கலவையை ஊற்றி ஃபிரீஸரில் 1 - 11/2 மணித்தியாலங்கள் வைத்து எடுக்கவும்.
  • மீண்டும் பீட்டரால் அல்லது கரண்டியால் பொங்க பொங்க அடிக்கவும்.
  • ஃபிரீஸரில் வைத்து இறுகியதும் எடுத்து பரிமாறலாம்.
  • சுவையான ஐஸ்கிறீம்.

குறிப்பு:

இரண்டாம் முறை அடித்ததும் குறைந்தது 21/2 மணித்தியாலங்களாவது ஃபிரீஸரில் வைக்கவும். விரும்பினால் நட்ஸ், டூட்டி ஃபுரூட்டி சேர்க்கலாம். வனிலாவுக்கு பதில் வேறு பழ எஸன்ஸும் சேர்த்து அதே நிறங்களும் சேர்க்கலாம்.

வழங்கியவர்

Mrs. B. Narmatha

பரிமாறும் அளவு

2 - 3 நபர்களுக்கு
random food image


comments
கட்டிப்
டிசம்பர் 31, 2007 - 4:29am - வழங்கியவர் thalika

கட்டிப் பால் என்றால்ல் திக்கான பால் தானே நர்மதா..தெரிந்தவுடன் செய்து பார்க்க வேண்டும்.

அன்பின் தளிகா
ஜனவரி 2, 2008 - 9:17pm - வழங்கியவர் Nila2006

அன்பின் தளிகா,
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். கட்டிப்பல் என்பது கன்டென்ஸ்ட் மில்க் (eg: Nestle-MilkMaid). செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்
-நர்மதா:)