கோதுமை மாவு அப்பம்

தேதி: November 17, 2007

பரிமாறும் அளவு: மூன்று பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
வெல்லம் - ஒரு கப்
சோடா மாவு - கால் தேக்கரண்டி
ஏலக்காய் - இரண்டு
உப்பு - ஒரு பின்ச்
தேங்காய் - இரண்டு பத்தை (சிறிய பல்லாக அரிந்தது)
சிறிய வாழைப்பழம் - ஒன்று (அ) பெரியது பாதி


 

வெல்லத்தை தண்ணீர் விட்டு கரைத்து மண் இல்லாமல் வடிகட்டவும்.
கோதுமை மாவில் வெல்லம் தண்ணீர், உப்பு, வாழைப்பழம், ஏலம் தட்டி போட்டு தேங்காய் பல்லு, அரிசி மாவு, சோட மாவு அனைத்தையும் கெட்டியாக கலந்து குழிக்கரண்டி அளவு எடுத்து எண்ணெயில் ஊற்றி டீப் ப்ரை செய்யவும். எண்ணெயை நன்றாக வடித்து பின் சாப்பிடவும்.


முட்டை சாப்பிடுபவர்கள் ஒரு முட்டை சேர்த்து கொள்ளவும். ஆப்பச்சட்டி இருந்தால் அதை பயன்படுத்தவும். இல்லை என்றால் சிறிது தளற கரைத்து செட் தோசை மாதிரியும் செய்து சாப்பிடலாம். அரிசி மாவுக்கு பதிலாக மீதியான தோசை மாவையும் சேர்க்கலாம். இனிப்பு கம்மியாக இருந்தால் கொஞ்சம் சர்க்கரை வேண்டுமானால் சேர்த்து கொள்ளுங்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

I tried this recipi. It's very easy to prepare and very tasty. My daughter(2 1/2 years) like this very much. Thank you.

I.Subraja

தேங்க்யு
கோதுமை அப்பம் செய்து பார்த்ததற்கு மிகவும் நன்றி, என்னுடைய ரெஸி எல்லாம் என் பிள்ளைகள் எதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்களோ அது தான் பாதி மீதி எனக்கு பிடித்ததும், இஸ்லாமிய இல்ல விஷேஷ்ங்களில் செய்வதும்.
ஜலீலா

Jaleelakamal

நன்றி மேடம். என் பெயர் சுப்ரஜா. HAPPY NEW YEAR 2008 I.Subraja

I.Subraja

விஜிசத்யா இதை டிரை பண்ணி பாருங்கள்.
ஜலீலா

Jaleelakamal

அன்பு ஜலீலாபானு மேம்

எப்படியிருக்கிறீங்க,நான் இன்று உங்கள் ரெசிப்பி கோதுமை மாவு அப்பம் செய்து பார்த்தேன் நன்றாக செய்யவும் வந்தது சுவையாகவும் இருந்தது.இன்று வீட்டில் 2 வாழைபழம் மிக கனிந்து சாப்பிடமுடியாதநிலையில் இருந்தது அதை வைத்து என்ன செய்யலாம் என்று தேடுகபக்கம் போனேன் முதல் குறிப்பே உங்கள் உடையது செய்து விட்டேன்,எனது 11/4 வயது மகனுக்கு பிடித்து விட்டது.நான் இந்த பக்குவத்தை பணியாரம் செய்யும் பதத்திற்கு கலந்து பணியார கல்லில் வார்த்து எடுத்தேன் மிகவும் அருமை எனது அம்மா மைதாமாவில் செய்து, நான் சாப்பிட்ட ஞாபகம் வந்தது

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Hi Mahalakshimi!!Where do you live in China? Iam new to Arusuvai.com.So finding this quiet difficult to access. Anyways do reply for this message.
Iam living with my husbnd at Huangdao and we are the only Indinas here.Update more bout you. Lets be in touch.

Anitha Velsamy, China

மஹா கோதுமை அப்பம் செய்து பர்த்ததற்கு மிக்க நன்றி உங்க பையனுக்கு ரொம்ப பிடித்துள்ளதா?
நான் செய்வது என் பசங்க அவங்க பிரெண்ட்ஸ் சர்டிபிகேட் கொடுத்த உணவுகள் தான் அதிகம்.
இன்று கூட டிபன் பாக்ஸ் காலி வந்ததும் இன்னும் இருக்கா என்று கேட்டார்கள்.
நிறைய பிரெட் ரெஸிபி இருக்கு டிரை பண்ணி பாருங்கள் பிடித்தால் செய்யுங்கள்.

ஜலீலா

Jaleelakamal