தேங்காப்பூ-இனிப்பு இட்லி

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - அரைக் கிலோ
சர்க்கரை - ஒரு கப்
தேங்காய் - ஒன்று
முந்திரிப் பருப்பு - 25 கிராம்
உலர் திராட்சை - 20 கிராம்
ஏலக்காய்ப் பொடி - அரை தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
சோடா உப்பு - 2 சிட்டிகை
டால்டா - 50 கிராம்


 

பச்சரிசியை ஊற வைத்து சுத்தம் செய்து இடிக்கவும். அரிசி ரவை போல் இடிபட்டதும் அதில் இருந்து ஒரு ஆழாக்கு அரிசியை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மீதமுள்ளவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் அரைப்பது என்றால், முதலில் ஒரு ஆழாக்கு அரிசியை மட்டும் தனியே ரவை போல் அரைத்து எடுத்து விட்டு, மீதமுள்ளவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
ரவை போன்ற அரிசியில் திட்டமாக நீர்விட்டு கரைத்து, கஞ்சி காய்ச்சி ஆற வைத்து, நைசாக அரைத்து வைத்திருக்கும் அரிசி மாவை போட்டு கெட்டியாகக் கரைத்து வைக்கவும்.
ஏழெட்டு மணிநேரம் கழித்து மாவை எடுத்து அதில் தேங்காய்த் துருவல், சர்க்கரை, வறுத்த முந்திரிப் பருப்பு, திராட்சை, சோடா உப்பு, உப்பு, மாவு புளிக்காவிட்டால் அரை கப் மோர் இவைகளைச் சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.
இந்த மாவை இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்